இறைச்சிக்காக மாடுகளை விற்பதை தடை செய்யும் வகையில் மத்திய அரசு அறிவித்துள்ள புதிய விதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கேரளா முதல்வர் பினராய் விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாட்டிறைச்சிக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிகள் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றார்.இதன் மூலம் மாநில அரசுகளின் உரிமையை மத்திய அரசு ஆக்கிரமிப்பு செய்வதாகவும் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார்.