திங்கள், 29 மே, 2017

மாட்டிறைச்சி சாப்பிடுங்கள்.. மத்திய அரசை நான் பார்த்துக்கொள்கிறேன்! ஓட ஓட விரட்டி அடிப்பேன் !! நாராயணசாமி அதிரடி வீடியோ

மாட்டிறைச்சி சாப்பிடுங்கள்.. மத்திய அரசை நான் பார்த்துக்கொள்கிறேன்! ஓட ஓட விரட்டி அடிப்பேன் !! நாராயணசாமி அதிரடி வீடியோ 
புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து மதத்தினரும் வசித்து வருவதால் மாட்டிறைச்சிக்கான தடை விதிப்பது முடியாத காரியமென்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை தடை விதித்துள்ளது.
விவசாய பணிகளுக்கு மட்டுமே சந்தைகளில் மாடுகளை விற்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மற்றும் கேரளா உட்பட 4 மாநிலங்கள் மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இது பற்றி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசுகையில்: தாழ்த்தப்பட்ட, பிறப்படுத்தப்பட்ட, அடித்தட்டு மக்கள் இந்த மாட்டிறைச்சியை சாப்பிடுகின்றனர். புதுவையை பொருத்தவரை மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் மத்திய அரசின் சட்டத்தை அமல்படுத்த முடியாது.
ஏனெனில் இங்கு அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகின்றனர். அனைத்து கலாச்சார மக்களும் வசித்து வரும் நிலையில் மாட்டிறைச்சிக்கான தடையை அமல்படுத்த முடியாது என்று அதிரடியாக தெரிவித்தார்.
http://kaalaimalar.in/central-government-ban-on-beef-meat-will-not-implemented/