பசுவதை தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெறவில்லை என்றால் அனைத்து மக்களையும் திரட்டி போராட்டம் நடத்த போவதாக தமிழக எதிர் கட்சிகள் கூட்டாக அறிவிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் இரா.முத்தரசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சாதாரண மனிதனின் உண்ணும் அதிகாரத்தை பறிக்கும் பசுவதை தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய அரசின் இந்த முடிவு உணவுக்கான உரிமையை தகர்த்து எறிந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். உடனடியாக தமிழக அரசு மவுனத்தை கலைத்து தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தலைவர்கள் விரைவில் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.