மாட்டிறைச்சி விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. ஆட்சியாளர்கள் மக்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஒரு முஸ்லீம் மன்னர் இருந்துள்ளார். அவர் தான் பாபர்.
அவர் ஆப்கானிஸ்தானில் இருந்தபோது, அவரது மகன் ஹுமாயூன் இந்தியாவை ஆண்டு வந்தார்.
அப்போது பாபர், ஹுமாயூனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், மகனே, நீ ஆட்சி செய்யும் நாடு, பசுவை தெய்வமாக கருதும் மக்கள் அதிகம் உள்ள நாடு. ஆகவே நீ பசுவை அறுக்காதே.
அவர்கள் மனது புண்படும்படி நடந்து கொள்ளாதே. போரில் வெற்றி பெறுவது நமக்கு எளிது. மக்களின் மனதை வெல்வது கடினம். ஆகவே நீ அவர்களின் மனதை வென்றெடு.” இவ்வாறு பாபர் தனது கடிதத்தில் குறிப்பிட்டார்.
மொகலாய மன்னர்களின் சமய சகிப்பின்மை காரணமாவே அவர்களால் 800 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்ய முடிந்தது. பெரும் படை இருந்தும், மொகலாயர்கள் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தவில்லை.
இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.
மதநல்லிணக்கத்தோடு செயல்பட்ட பாபர் தான், அயோத்தியில் கோவிலை இடித்து விட்டு மசூதியை தனது பெயரில் கட்டினார் என்ற குற்றச்சாட்டும், இதன் மூலம் நிராகரிக்கப்படுகிறது.
பாபர் எழுதிய கடிதம், பாபர் நாமா என்ற பெயரில் இன்றும் டெல்லி அருங்காட்சியகத்தில் உள்ளது.
http://kaalaimalar.in/babur-letter-to-humayun/