செவ்வாய், 30 மே, 2017

தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்! May 30, 2017

தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்!


மாட்டிறைச்சி தடை விவகாரம் குறித்து தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசின் மாட்டிறைச்சிக்கான தடை நடவடிக்கை ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கு  எதிரானது; மத்திய அரசின் நடவடிக்கையை தொடக்கத்திலேயே எதிர்க்க வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து சட்டத்தைத் திரும்பப் பெற பிரதமரை வலியுறுத்த வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பாஜக ஆளாத மாநில முதல்வர்கள் அனைவருக்கும் கேரள முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.