தமிழக எல்லைகளே தெரியாதவர்களிடம் அரசியல் பற்றி கேட்கிறார்கள் என, பிரபல இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழ் திரைப்பட இயக்குனர்கள் 8 பேர் சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குனர் பாரதிராஜா, திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு கண்டனங்களை தெரிவித்தார்.
மேலும்,“மொழிவாரி மாநிலம் பிரிந்தபோது அனைத்தும் முடிந்துவிட்டது எனவும், ஒரு மாநிலத்தை ஆளும் தகுதி அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உள்ளது எனவும் பாரதிராஜா தெரிவித்தார்.மேலும், இந்த மண்ணை அயலான் ஆள்வதற்கு உரிமையில்லை எனவும், இந்த மண்ணுக்குச் சொந்தமானவர்தான் தலைவனாக வேண்டும் அவர் காட்டமாக தெரிவித்தார்.