இறைச்சிக்காக மாடுகளை விற்க விதிக்கப்பட்ட தடைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு பிறப்பித்த தடை உத்தரவுக்கு எதிராக செல்வ கோமதி, ஆஷிக் இலாகி பாபா ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உணவு என்பது அடிப்படை உரிமை என்றும் அதில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்தனர். புதிய சட்டத்தை 4 வாரங்களுக்கு அமல்படுத்தக் கூடாது என கூறிய நீதிபதிகள், உணவை தேர்வு செய்வது அவரவர் தனிப்பட்ட உரிமை என்றும், என்ன சாப்பிட வேண்டும் என அரசு தீர்மானிக்க கூடாது என்றும் தெரிவித்தனர்.
மத்திய அரசின் தடையானது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள உரிமைகளுக்கு எதிரானது என குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.