தினசரி விலை நிர்ணய முறையைக் கண்டித்து வரும் 12-ம் தேதி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கச்சா எண்ணைய் விலைக்கு ஏற்ப நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதாக பங்க் உரிமையாளர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், தினசரி விலை நிர்ணய முறையைக் கண்டித்து வரும் 12-ந் தேதி பங்க்குகளை மூடி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், எண்ணெய் நிறுவனங்கள் தினசரி விலையை நிர்ணயம் செய்வதால் தங்களுக்கு எவ்வித லாபமும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நடைமுறைக்கு எதிராக வரும் 12-ம் தேதி எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து எண்ணெயை வாங்குவதும் இல்லை, விற்பனையை செய்வதும் இல்லை என முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.