ஜெர்மனியில் ஜி 20நாடுகளின் மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீக்கொளுத்தி வன்முறையில் ஈடுபட்டதால் ஹம்பர்க் நகரமே போர்க்களமானது.
ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற்று வருகிறது. புவி வெப்பமாதலைத் தடுக்க வகை செய்யும் பாரீஸ் உடன்பாட்டில் இருந்து வெளியேறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கிரீன்பீஸ் அமைப்பினரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஹம்பர்க் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பலரும் முகமூடி அணிந்துகொண்டு சாலையில் சென்ற வாகனங்களைத் தீவைத்துக் கொளுத்தினர். சாலையின் குறுக்கே தடுப்புகளைப் போட்டதுடன் கையில் கிடைத்த எல்லாவற்றையும் காவலர்கள் மீது வீசி எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் ஹம்பர்க் நகரமே போர்க்களம்போல் காட்சியளித்தது.
வன்முறையாளர்களில் பலர் கட்டடங்களின் கண்ணாடியை அடித்து நொறுக்கியதுடன் கடைகளுக்குள் புகுந்து பணம் கொடுக்காமலேயே பொருட்களை அள்ளிச் சென்றனர். வன்முறையாளர்களின் தாக்குதலில் 160 காவலர்கள் காயமடைந்தனர். போராட்டம் வலுவாக இருக்கும் என்பதை எதிர்பார்த்தே நாடு முழுவதும் இருந்து 15ஆயிரம் காவலர்கள் வரவழைக்கப்பட்டு ஹம்பர்க் நகரில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஏராளமான காவலர்கள் வலுவுடன் போராடி வன்முறையாளர்களை விரட்டியடித்தனர். தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனத்தின் உதவியுடன் போராட்டம் ஒடுக்கப்பட்டது. வன்முறையாளர்களில் 70பேரைப் பிடித்துச் சென்றதுடன் அவர்களில் 15பேரை நீதிமன்றத்தில் நிறுத்தியபின் சிறையில் அடைத்தனர்.
ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் வன்முறை ஒடுக்கப்பட்ட பின் சாலைகள் முழுவதும் எரிந்த வாகனங்கள், உடைந்த பாட்டில்கள், உடைக்கப்பட்ட தடுப்பு வேலிகள், காலணிகள் ஆகியவற்றால் நிறைந்துள்ளன. ஒரு பெரும்போர் நிகழ்ந்து ஓய்ந்தது போல் தெருக்களில் எங்கும் ஆள் நடமாட்டமே இல்லை. இங்குள்ள கடைகளில் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டுப் பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன.