ஞாயிறு, 9 ஜூலை, 2017

அரசு குளிர்சாதன பேருந்துகளில் வைஃபை வசதி! July 08, 2017

அரசு குளிர்சாதன பேருந்துகளில் வைஃபை வசதி!


அரசு குளிர்சாதன பேருந்துகளில் வைஃபை வசதி செய்யப்படும் என போக்குவரத்து துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவையில் 2017- 2018ம் ஆண்டுக்கான போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மின்கலம் மூலம் இயக்கக்கூடிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், குளிர்சாதன பேருந்துகளில் வைஃபை வசதி செய்வது உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. 

மேலும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதனப் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணமில்லா பரிமாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என்பன பல அறிவிப்புகள் போக்குவரத்து துறை மானியக் கோரிக்கையில் இடம்பெற்றுள்ளன. 

Related Posts: