புதன், 12 ஜூலை, 2017

தனி மாநிலம் கோரி டார்ஜிலிங்கில் 27 வது நாளாக முழு அடைப்பு! July 12, 2017

தனி மாநிலம் கோரி டார்ஜிலிங்கில் 27 வது நாளாக முழு அடைப்பு!


கூர்க்காலந்து தனி மாநிலம் கோரி, மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் இன்று 27வது நாளாக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

கூர்க்காலந்து தனி மாநிலம் உருவாக்க கோரி, மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கூர்க்கா ஜன்சக்தி மோர்ச்சா அமைப்பு சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் இன்று 27வது நாளை எட்டியுள்ளது. 

முக்கிய வீதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அசாதாரணமான சூழல் நிலவுவதால், அமைதி வேண்டி அங்குள்ள கோயிலில் பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, நேற்று டார்ஜிலிங்கில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கோரிக்கை நிறைவேறும் வரை வரும் 15ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இப்போராட்டத்தில் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஒரு நபர் பங்கேற்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.  

Related Posts: