வியாழன், 13 ஜூலை, 2017

என் பேச்சுரிமைக்கு யாராலும் தடை போட முடியாது : அசத்துத்தின் உவைஸி ஆவேசம்....!!

என் பேச்சுரிமைக்கு யாராலும் தடை போட முடியாது : அசத்துத்தின் உவைஸி ஆவேசம்....!!
நான் மக்களை தூண்டும் விதமாக பொதுமேடையில் பேசுவதாக கூறுகிறார்கள். நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள், நான் உயிரற்ற பிணமல்ல, உயிரும் உணர்வும், உரிமையும், உடமையும் கேட்கும் மக்களின் உள்ளம் அறிந்து அவர்களின் துடிப்பும், வேதனையும் அறிந்து என் வாயால் ஆட்சியாளர்களிடம் நியாயத்தை கேட்கும் உயிருள்ள மனிதன் நான்...
இதற்கு பெயர்தான் தூண்டுதல் என்று நீங்கள் கூறினால் ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம் !
ஒரு நாளை தேர்வுசெய்து மகாராஷ்டிராவில் உள்ள ஏதேனும் ஒரு மைதானத்தில் நீங்கள் 100 பேரை திரட்டி வாருங்கள். நான் தனியாக வருகிறேன் இரு தரப்பினரும் விவாதிப்போம் !
என்னை ஊமையாக்குவது உங்களால் முடியாத காரியம். என்னுடைய பேச்சுக்கும் உரிமைக்கும் யாரும் என்னை தடைசெய்ய முடியாதுயென்பதனை இந்த இடத்தில்
தெளிவாக கூறிக்கொள்கிறேன் !

Related Posts: