வெள்ளி, 14 ஜூலை, 2017

ஓஎன்ஜிசி நிறுவனத்தை எதிர்த்து கதிராமங்கலத்தில் பொதுமக்கள் நூதனப்போராட்டம்! July 13, 2017

ஓஎன்ஜிசி நிறுவனத்தை எதிர்த்து கதிராமங்கலத்தில் பொதுமக்கள் நூதனப்போராட்டம்!


கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேறக் கோரி, 3-வது நாளாக சமைத்து சாப்பிடும் போராட்டத்தில் பொது மக்கள் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதாகி சிறையிலுள்ள 10 பேரை விடுவிக்க வேண்டும்,  ஓ.என்.ஜி.சி நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கதிராமங்கலம் மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கதிராமங்கலத்தில் மாணவர்கள் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், காவல்துறையினர் அவர்களது போராட்டத்திற்கு அனுமதி தரவில்லை. இந்நிலையில், இன்று 3-வது நாளாக அய்யனார் கோவில் திடலில் சமைத்து உண்ணும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர்.

அவர்களை, மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் மார்க்ஸ் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் கதிராமங்கலம் சம்பவம் குறித்து, ஆய்வு அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார். 

கதிராமங்கலம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறையில் அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள், கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, 2 மணி நேரப் போராட்டம் கைவிடப்பட்டது

Related Posts: