திங்கள், 10 ஜூலை, 2017

சுனையில் மூழ்கி மாணவியர் பலி


சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம், #சிங்கம்புணரி பகுதியை சேர்ந்தவர்கள் #ரிகாசாபானு#ஆஷா. இருவரும் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று முன் தினம் (#ஜூலை7) மாலை #பிரான்மலை அடிவாரத்தில் #கந்தூரி விழாவில் பங்கேற்றனர். பின்னர் இருவரும், தங்களது தோழிகளோடு மலை உச்சிக்கு சுற்றி பார்க்க சென்றதாக கூறப்படுகிறது . அங்கு , இருவரும் சிறுநீர் கழிக்க செல்வதாக கூறி சென்றனர். நீண்ட நேரமாகியும் வரவில்லை. மற்ற 3 பேரும் கீழே இறங்கி வந்து தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பெற்றோர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று இரவு முதல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தேடி வந்தனர். நேற்று காலை இருவரும் ஆபத்தான சுனையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. உண்மை யிலே இந்த செய்தி கேட்டவுடனே எங்கள் நெஞ்சம் பதபதக்கிறது ....
இந்த நிகழ்வு நடந்ததாக கூறப்படும் பகுதி மிகவும் அபாயகரமான பகுதி காற்றின் வேகம் வழக்கத்திற்மாறாக அதிவேகமாக இருக்குகூடிய பகுதி இது..
ஒரு தாழ்வான வேண்டுகோள்
* பிரான்மலை யில் ஏறுவதற்கு நிறைய கட்டுபாடுகள் விதிக்கபடவேண்டும் ....
* மதுஅருந்திவிட்டு சில இளைஞர்கள் போதை யில் பிரான்மலையில் உச்சி செல்லும் விசமசெயல்களை வனத்துறை தடுத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
* சிறுவர்கள் குழந்தைகள் பிரான்மலை யில் ஏறுவதற்கு முறையான ரோப் வசதியை தமிழகஅரசு செய்யவேண்டும்
இவன் :

Related Posts: