திங்கள், 10 ஜூலை, 2017

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தி வலியுறுத்தல்! July 10, 2017


குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தி வலியுறுத்தல்!

குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீதான காவலை வரும் 24ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். 

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியற்காக மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி இளமாறன், டைசன், அருண்குமார் உள்ளிட்டோர் கைது செய்யபட்டனர். பின்னர் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கபட்டனர்.

இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிந்ததால் நால்வரும் புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் 13வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நால்வரையும் வரும் 24ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். 

பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருமுருகன் காந்தி, தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்தும் விதத்தில் உரையாற்றியுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Posts: