ஞாயிறு, 2 ஜூலை, 2017

"உலகிலேயே எந்த நாட்டில் GST வரி அதிகம் தெரியுமா?" - ஏமாந்து விடாதீர்கள் மக்களே. தெரிந்து கொள்ளுங்கள்


உலகில் ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைப்படுத்தி வரும் 140-க்கும் மேற்பட்ட நாடுகளில், இந்தியாவில் மட்டுமே ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் மிகவும் அதிகமாகும்.
உலக நாடுகளில் சராசரியாக 10 சதவீதத்துக்கு உள்ளாக ஜி.எஸ்.டி. வரி இருக்கும்நிலையில், நம் நாட்டில்  அதிகபட்சமாக 28 சதவீதம் வரை பிரதமர் மோடி தலைமையிலான அரசு  விதித்துள்ளது.
முன்னோடி பிரான்ஸ்
சரக்கு மற்றும் சேவை வரியை உலகிலேயே முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்தான். இன்றைய சூழலில் உலகில் 140-க்கும் மேற்பட்ட நாடுகள் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை கடைபிடித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் ஒற்றை ஜி.எஸ்.டி. வரியும், கனடா, பிரேசில் போன்ற நாடுகளிலஇரட்டை ஜி.எஸ்.டி. வரியும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இரட்டை ஜி.எஸ்.டி.
ஜூலை 1-ந்தேதி முதல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி. வரி என்பது, கனடா பின்பற்றும் இரட்டை ஜி.எஸ்.டி. முறையாகும். அதாவது, மாநிலங்களும், மத்திய அரசும் தனித்தனியாக வரி வசூல் செய்து கொள்ளும் முறையாகும்.
ஒற்றை வரி
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் ஒற்றை ஜி.எஸ்.டி. முறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த நாடுகளில் ஏழை மக்கள் மிக, மிகக் குறைவு. நம் நாட்டைப் போல் அல்லாமல், வசதியானவர்களுக்கு  ஒரு வரியும், ஏழைகளுக்குஒரு வரியும் விதிக்கப்படாது. 
உலக நாடுகளைப் பொருத்தவரை ஜி.எஸ்.டி. வரி  என்பதன் அடிப்படைத்துவம்ஒன்றுதான். சில நாடுகளில் மட்டுமே ஜி.எஸ்.டி.க்கு மாற்றாக ‘வாட்’ வரி பயன்படுத்தப்படுகிறது. இருந்தபோதிலும் அதன் அடிப்படையில் பார்த்தல், ஜி.எஸ்.டியில் பின்பற்றப்படும் வரி விதிப்பு முறையே இதிலும் இருக்கிறது.

குறைப்பும், உயர்வும்
கனடா போன்ற இரட்டை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை இருக்கும் நாடுகளில் தொடக்கத்தில் ஜி.எஸ்.டி.வரி அமல்படுத்தப்பட்ட பின், ஏராளமான பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பின. பல்வேறு ேவறுபாடுகள் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டன. அதன்பின், கனடா அரசு ஜி.எஸ்.டி. வரியை தான் அறிமுகப்படுத்திய அளவில் இருந்து 2 முறை குறைத்தது.
இன்னும் சில நாடுகள், ஜி.எஸ்.டி. வரியை முதன்முதலில் அறிமுகப்படுத்தும்போது மிகக் குறைவாக வரி விகிதங்களை மிகக்குறையாக செயல்படுத்தி, காலப்போக்கில் வரியை உயர்த்தின.
எந்த நாட்டில் எவ்வளவு வரி?
உலக நாடுகளில் ஜி.எஸ்.டி. வரி பிரான்சில் 20 சதவீதம், இங்கிலாந்து 20 சதவீதம், கனடா 13 முதல் 15 சதவீதம், நியூசிலாந்தில் 15 சதவீதம், மலேசியாவில் 6 சதவீதம், சிங்கப்பூரில் 7 சதவீதம், ஆஸ்திரேலியாவில் 10 சதவீதம், பஹ்ரைன் 5சதவீதம், சீனா 17 சதவீதம், அமெரிக்கா 7.5 சதவீதம், மியான்மர் 3 சதவீதம் என வரி விதிக்கப்படுகிறது.
இங்கு அதிகம்
ஆனால், மக்கள் தொகை அதிகமும், வரி வசூல் அதிகமாகவும் கிடைக்கும்நிலையில் உள்ள இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரியும் மிக உயர்ந்தபட்சமாக 28சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.