தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கு நிலங்கள் கையப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வேளாண்மை துறை மானியக் கோரிக்கையில் பேசிய கும்பக்கோணம் எம்எல்ஏ அன்பழகன், தாமிரபரணி - கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத் திட்டம் தற்போது எந்த நிலையில் உள்ளது என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர், இந்த திட்டத்திற்கு திமுக ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டாலும், நிலங்கள் கையகப்படுத்தவில்லை என புகார் கூறினார்.
மேலும், இந்த திட்டத்திற்காக முதல் இரண்டு பகுதிகளில் 90% நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 3 மற்றும் 4 வது பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அவர் தெரிவித்தார்.
இதேபோல், வேளாண்மை துறை மானியக் கோரிக்கையில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில், ஒரு விவசாயிக்கு கூட பயிர் காப்பீடு வழங்கவில்லை என குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர், விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை மாவட்ட ரீதியாக படிப்படியாக கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் காப்பீட்டு நிறுவனங்கள் முறையாக விவசாயிகளுக்கான தொகையை வழங்குகிறார்களா என வேளாண்துறை அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.