சென்னை பெருநகர மக்கள் அதிகம் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட வாட்டர் கேன்களின் விலை ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பின்னர் தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஏன் இந்த விலை உயர்வு, இதை முறைப்படுத்துவது எப்படி? இதன் பாதிப்புகள் குறித்து இப்போது பார்ப்போம்...
சென்னை மாநகர மக்களின் தண்ணீர் தேவையை புழல், செம்பரபாக்கம் உள்ளிட்ட நான்கு ஏரிகள் பூர்த்தி செய்தாலும், குடிநீர் என்று வந்து விட்டால் சென்னை மக்கள் பெரிதும் நம்பி இருப்பது கேன் வாட்டர்களை தான். பிளாஸ்டிக் குடுவையில் அடைக்கப்பட்ட குடிநீர், 30 லிருந்து 80 ரூபாய வரை விற்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் மட்டும் 1450 தனியார் விநியோகிக்கும் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. அதில் காஞ்சிபுரம், திருவள்ளுர் சென்னை ஆகிய மாவட்டங்களில் மட்டும் 450 தண்ணீர் வழங்கும் ஆலை உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 3 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகிக்க பட்டு வருகிறது.
இப்படி பெரும் லாபம் கொழிக்கும் இந்த தொழிலில் சோதனையாக வந்துள்ளது. வாட்டர் கேன்கள் மீதான ஜீஸ்டி வரிவிதிப்பு. வாட்டர் கேன் தொழிலை சேவையாக செயது வருகிறோம் என்றும் ஜிஎஸ்டி வரிவித்திப்பு கடுமையாக தங்கள் தொழிலை பாதிக்கும் என்கிறார் கேண் குடிநீர் தயாரிப்பாளர்கள் சங்க அமைப்பு செயலாளர் ஆனந்த் நாரயணன்.
மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவது அரசின் கடமை. அதில் அரசாங்கம் தவறியதாலேயே தாங்கள் இதனைச் செய்து வருவதாகவும், அரசாங்கம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கினால் தங்களுக்கு இந்த வேலையே இருக்காது என்கிறார் ஆனந்த் நாரயணன்.
இப்படிச் சொன்னாலும், பல குடிநீர் வழங்கும் நிறுவனங்கள் எந்த வித அடிப்படை வசதி இயங்கி வருகிறது. இதனை முறைப்படுத்தாமல், 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிப்பால் சுமை தங்கள் மீது ஏறி இருப்பதாக தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வாட்டர் கேண்களை பயன்படுத்துவதை தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றி கொண்ட மக்களுக்கு அரசால் செயல்படுத்தப்பட்ட வந்த அம்மா குடிநீர் திட்டம் இன்னும் எட்டாக்கனியாக உள்ளது. இதனை விரிவு படுத்துவதோடு, விரைவாக அனைத்து தரப்பு மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மக்கள் மீது திணிக்க பட்டுள்ள விலை உயர்வு தடுக்கப்படும்.