வெள்ளி, 7 ஜூலை, 2017

இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு! July 07, 2017

இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!


மருத்துவ மாணவர் சேர்க்கையில், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு, இடைக்கால  தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

தமிழக அரசின் இடஒதுக்கீடு முறையை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர் தலைமையிலான அமர்வு, மாநில பாடத்திட்டத்தில் 85 சதவீத ஒதுக்கீடு, நீட் தேர்வு முறையை பாதிக்காது என தெரிவித்தது.

மேலும், தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள்,, இது தொடர்பான ஒரு மனு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி வழக்கை முடித்து வைத்தனர்.

Related Posts: