வெள்ளி, 7 ஜூலை, 2017

ஐஐடிகளில் மாணவர் சேர்க்கை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை! July 07, 2017

ஐஐடிகளில் மாணவர் சேர்க்கை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!


நாடு முழுவதும் ஐஐடி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

ஐஐடி நுழைவுத் தேர்வில் இந்தி வினாத்தாளில் 2 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டதை சுட்டிக்காட்டி வேலூர் மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்தி வினாத்தாளில் தவறான கேள்வி கேட்கப்பட்டதை சுட்டிக்காட்டி  அனைவருக்கும் கருணை மதிப்பெண் வழங்கியதற்கு மனுதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஐஐடி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடத்தவும், இது தொடர்பான வழக்கை பிற நீதிமன்றங்கள் விசாரிக்கவும் இடைக்கால தடை விதித்தது. 

Related Posts: