புதன், 12 ஜூலை, 2017

தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் எண்ணெய் உட்கொள்ள தகுந்ததா? July 12, 2017




தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் எண்ணெய் உட்கொள்ள தகுந்ததா? என சிறப்பு வல்லுநர் குழு அமைத்து ஆய்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

தஞ்சை ஒரத்தநாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தனியார் நிறுவனங்கள் தரம் குறைந்த வகையில் பல்வேறு விலைகளில் எண்ணெய் விற்பனை செய்வதாக கூறியுள்ளார். அவற்றை பயன்படுத்தும் மக்களுக்கு, வயிற்றுவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.  

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர், இது குறித்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய தலைவர்,  சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Related Posts: