கன்னியாகுமரி அருகே பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை பயன்படுத்தி கேன்சர் நோயால் நிதி திரட்ட முயன்ற இளைஞர் மீது பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பொன்னப்பநாடார் காலனியை சேர்ந்தவர் ஆட்லின் மினி. இவர் தேமுதிகவில் மகளிரணி நகர செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர், முகநூலில் போலியான முகவரியை துவங்கி அதில் ஆட்லின் மினியின் படத்தை இணைத்துள்ளார். அந்த புகைப்படத்தின் கீழ், ஆட்லின் மினி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ செலவிற்கு 8 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த ஆட்லின் மினி அதிர்ச்சியடைந்து நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளார்.