வெள்ளி, 14 ஜூலை, 2017

பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளியின் படம் வெளியீடு! July 14, 2017


பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளியின் படம் வெளியீடு!


சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில், மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபரின் படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். 

தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் குண்டை வீசிச் சென்றனர். காவல்நிலையம் வாசலில் வீசப்பட்ட 3 குண்டுகளில் இரண்டு குண்டுகள் வெடித்தால் பதற்றம் ஏற்பட்டது. தேனாம்பேட்டை காவல்நிலையத்தின் முகப்பு பகுதியிலுள்ள 5 சிசிடிவி கேமிராக்களும் இயங்காததால் குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மண்ணெண்ணெய் குண்டு வீசியதாக சந்தேகப்படும் 2 பேரில், ஒருவரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். இவர் குறித்து தகவல் தெரிந்தால், 98402 23457 மற்றும் 97863 00555 ஆகிய செல்போன் எண்களில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Posts: