வெள்ளி, 14 ஜூலை, 2017

எதிர்க்கட்சிகளை சமாளிக்குமா மத்திய அரசு ? July 14, 2017

எதிர்க்கட்சிகளை சமாளிக்குமா மத்திய அரசு ?


நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடர் வரும் 17-ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் பல முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மத்திய அரசுக்கு எதிராக 5 முக்கிய பிரச்சனைகளை முன்வைத்து கேள்விகளை எழுப்புவதற்கு 18 எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.  பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பிரச்சனைகள், ஜிஎஸ்டி வரியை அமலாக்க மத்திய அரசு காட்டிய அவசரம், விவசாயிகளின் தற்கொலை சம்பவம் உள்ளிட்டவைகளை குறித்து நாடாளுமன்றத்தில் புயலை கிளப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும் ப.சிதம்பரம் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் குறித்தும் குரல் எழுப்ப எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. 

Related Posts: