தமிழக பள்ளிகளின் பாடத் திட்டங்களை மாற்றுவதற்கான நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. அதனால், பாடத்திட்டம் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
தமிழக பள்ளிகளில், மாணவர்களின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளது என்ற அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து, பள்ளிகளுக்கான பாடத்திட்டம் குறித்து கருத்து கேட்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் மூன்று நாட்களுக்கு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன், மூன்று மாதங்களில் வரைவு பாடதிட்டம் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், புதிய பாடத்திட்டம் எவ்வாறு அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேசிய தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் கற்க வேண்டும் என்ற தவறான எண்ணம் பெற்றோர் மனதில் உருவாகி வருவதாக பெற்றோர் ஆசிரிய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கலை திட்டத்தை விட அதிகமாக வரைவு பாடநூல் குறித்து பேசப்பட்டதாகவே குறிப்பிடுகிறார், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
கடந்த 2005ம் ஆண்டிற்கு பின்பு பாடதிட்டம் மாற்றப்பட உள்ளது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களை உள்ளடக்கியதாக இந்த புத்தகம் இருக்க வேண்டும். எனினும், அடிப்படையில் மாணவர்கள் புரிந்து படிக்க கூடியதாக இந்த புத்தக வடிவம் இருப்பது அவசியம் என்கின்றனர் துறை சார்ந்த வல்லுநர்கள்.
அடுத்த மூன்று ஆண்டுகளில், படிப்படியாக 12 வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாறவுள்ளது. தொடரும் அறிவியல் மாற்றங்கள், போட்டி தேர்வுகள் என பல காரணிகள் இருந்தாலும், அதை கற்பிக்கும் ஆசிரியர்களை எவ்வளவு விரைவாக அரசு தயார் செய்ய உள்ளது, எத்தகைய பயிற்சி அளிக்கபட உள்ளது என்பன போன்ற பல கேள்விகள் எழுகின்றன. வரைவு பாடதிட்டத்திற்கு பின்பு இதற்கான பதில்களை அரசு அளித்தல் அவசியம் என்கின்றனர் வல்லுநர்கள்.