ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

​ஹோட்டல்களில் சென்று பிரியாணி சாப்பிடுபவர்களா நீங்கள்..? February 10, 2018

சென்னை புறநகரில், மட்டன் பிரியாணியில் பூனைக் கறி கலக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இரவில் காணாமல் போகும் பூனைகள் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

சென்னை செங்குன்றம், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களில், மட்டன் பிரியாணி எனக்கூறி, பூனைக்கறி பிரியாணி விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சென்னை செங்குன்றத்தில் சோதனை நடத்திய தனிப்படை போலீஸார், கொல்லப்பட்ட 13 பூனைகளையும் பறிமுதல் செய்தனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும், மயிலாப்பூர், அண்ணா நகர், கோட்டூர்புரம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் சுற்றித்திரிந்த பூனைகள், திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. 

எனவே, இதுதொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீஸார், பூனையை விற்பவர்கள் யார்? அதனை ஆட்டுக்கறி என்ற பெயரில் மக்களுக்கு விநியோகிப்பவர்கள் யார்?, என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Image

Related Posts: