
ஒருங்கிணைந்த குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகள் இன்று நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 962 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம், இதுவரை தனித்தனியே நடத்தி வந்த குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகள், இம்முறை ஒருங்கிணைந்த தேர்வாக நடத்தப்படுகிறது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரைவாளர் உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும் இத்தேர்வு, இன்று நடைபெற உள்ளது. மொத்தம் 9 ஆயிரத்து 351 பணியிடங்களுக்கு, 20 லட்சத்து 83 ஆயிரத்து 152 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவற்றில், 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 விண்ணப்பங்கள், தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 962 மையங்களில், இத்தேர்வு நடைபெறுகிறது.