வியாழன், 31 மார்ச், 2022
போலி பகுத்தறிவாதிகளுக்கு பகிரங்க சவால்..!
பித்அத்கள் பெருகுவதற்கு பெரிதும் காரணம் ஆலிம்களா? மக்களா?
ஹதீஸ் கலையும் பலவீனமான செய்திகளும்
அற்புத வேதம் திருக்குர்ஆன்..!
பறிக்கப்படும் இஸ்லாமியர்களின் உரிமைகள்
அநீதி இழைக்கப்பட்ட முஸ்லிம் சிறைவாசிகள்
அடிப்படை வாத அமைப்பு என தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிப்பது சரியா?
ரமலானை வரவேற்போம்!
இறை உதவி பெற என்ன வழி?
அதிகாரத்தை பாழாக்காதீர்..!
இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி
வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் தொடர்ச்சியாக தொழுகையை ஜம்உ, கஸர் செய்து தொழலாமா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 16.03.2022 பதிலளிப்பவர் : எஸ். ஹஃபீஸ் M.I.Sc
எந்த பொருட்களை ஜகாத் கொடுக்க கணக்கீடு செய்ய வேண்டும்? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 16.03.2022 பதிலளிப்பவர் : எஸ். ஹஃபீஸ் M.I.Sc
திருமணங்களில் முகூர்த்த கால் நடுவது கூடுமா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 16.03.2022 பதிலளிப்பவர் : எஸ். ஹஃபீஸ் M.I.Sc
அகீகா ஏழாவது நாள் கொடுக்க முடியவில்லையானால் வேறு நாட்களில் கொடுக்கலாமா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 16.03.2022 பதிலளிப்பவர் : எஸ். ஹஃபீஸ் M.I.Sc
எனது உள்ளம் தூய்மையானது என்று நான் கூறமாட்டேன்! என்ற இந்த கூற்றை கூறியது யார்? யூஸுஃப் நபியா? அமைச்சரின் மனைவியா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 23-03-2022 M.A. அப்துர் ரஹ்மான்M.I.Sc (பேச்சாளர்,TNTJ)
ஸஹர் பாங்கு சொல்வது குழப்பத்தை ஏற்படுத்தும்! என்பதற்கு புகாரி 1583 வது ஹதீஸ் ஆதாரமாகுமா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 23-03-2022 M.A. அப்துர் ரஹ்மான்M.I.Sc (பேச்சாளர்,TNTJ)
இரண்டாவது திருமணம் செய்ய முதல் மனைவியிடம் அனுமதி கேட்க வேண்டுமா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 23-03-2022 M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc (பேச்சாளர்,TNTJ)
தி.மு.க அரசு சிறுபான்மையினர் நலனை காக்கிறதா?
தவ்ஹீத் ஜமாஅத் தடை செய்ய வேண்டிய அமைப்பா? பி.ஜே.பியின் குற்றச்சாட்டிற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் பதில் என்ன?
விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம்
31 3 2022
எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்ந்து 107 ரூபாய் 45 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலையும் 76 காசுகள் உயர்ந்து 97 ரூபாய் 52 காசுகளுக்கு விற்பனையாகிறது. இது போல், பிற மாநிலங்களிளும் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் 3 கட்ட பரப்புரையை தொடங்கியுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 7 வரை நாடு முழுவதும் பேரணிகள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, அவர்கள் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, கடந்த 10 நாட்களில் 9 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அவர், எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.
source https://news7tamil.live/congress-mps-protest-against-rising-prices.html
10.5% உள்ஒதுக்கீடு செல்லாது
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், வன்னியருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, 10.5 சதவீத உள்ஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு எதிரானது என கூறி தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் பாமக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் வன்னியருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க அனைத்து அதிகாரமும் மாநில அரசுக்கு உள்ளது.
அதனால் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் இன்று தீர்ப்பு அளித்திருக்கிறது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை உறுதி செய்யும் வகையில், வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
source https://news7tamil.live/vanniyar-reservation-is-not-valid-supreme-court-orders.html
முதலமைச்சர் டெல்லி பயணத்தின் விவரங்கள்
31 3 2022
4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயண அட்டவணை குறித்த விவரங்கள்.
இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவிற்கு அழைப்பிதழ் வழங்க உள்ளார்.
இந்த சந்திப்பின்போது, நீட் விவகாரம், மேகதாது அணை விவகாரம், தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தவுள்ளார்.
பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். (நிதின் கட்கரியின் இல்லம்), பிற்பகல் 3.30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து பேசவுள்ளார்.
மாலை 4.30 மணிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளார். நாளை காலை 10.30 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார்
மாலை 4.30 மணிக்கு மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை அவரது அலுவலகமான உத்யோக் பவனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/cm-stalin-delhi-visit-and-the-schedule.html
முதலமைச்சர்களை ஒருங்கிணைக்கும் ஜனநாயக யுத்தத்தை முன்னெடுப்பதில் முதலமைச்சர்
30 3 2022
நாடு முழுவதும் பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைக்கும் ஜனநாயக யுத்தத்தை முன்னெடுப்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின் மேடையில் பேசிய சீதாராம் யெச்சூரி, பாஜக அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு செயல்படும் விதம் இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் உள்ளதாக கூறினார். மேலும், பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைக்கும் ஜனநாயக யுத்தத்தில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளதாகவும், அதனை முன்னெடுப்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாஜக அரசுக்கு எதிராக தமிழக அரசு செயல்படும் விதம் இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் உள்ளன, இந்த விஷயத்தில் இந்தியாவிற்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது, முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, பாஜக அல்லாத மாநில முதல்வர்களை அழைத்து கூட்டம் நடத்த ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து இருந்தேன், தற்போது மீண்டும் மக்களின் சார்பாக அதை மீண்டும் வலியுறுத்துகிறேன், பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் கூட்டத்தை உடனே கூட்டுங்கள், அதில் தமிழகத்தின் நலன் மட்டுமல்ல இந்தியாவின் நலனே உள்ளது.” என அவர் காட்டமாக பேசினார்.
மேலும், “தமிழகத்தில் கடந்த தேர்தல்களில் பாஜகவுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து பாஜக – அதிமுக கூட்டணிக்கு வீழ்ச்சியை தந்தார்கள், அதே போன்று நாடு முழுவதும் பாஜகவிற்கு எதிரான ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்ட வேண்டும், அப்படிப்பட்ட அணி சேர்க்கை மாற்று சக்தியாக உருவாகும், 2024 – ல் ஜனநாயக ஆட்சி மலரும்” என அவர் கூறினார்.
source https://news7tamil.live/chief-minister-plays-key-role-in-war-against-bjp.html
டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
31 3 2022
4 நாள் பயணமாக டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்கவுள்ளார். இதனையொட்டி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று நள்ளிரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். விமான நிலையம் வந்த அவருக்கு மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தி.மு.க எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும், மலர்கொத்து வழங்கியும் முதலமைச்சரை வரவேற்றனர். மேலும், விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு பூர்ணகும்ப மரியாதை செலுத்தி டெல்லி வாழ் தமிழ் மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாடு இல்லத்துக்கு வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உறைவிட ஆணையர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் வரவேற்றனர். இதனையடுத்து தமிழ்நாடு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய மடலில், டெல்லியில் இன்று பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்திக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தர வேண்டிய வரி வருவாய், மழை – வெள்ள நிவாரணத் தொகை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக, இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக விளக்கியுள்ளார். இதையடுத்து, இந்திய அரசியல் தலைவர்களையும் சந்திக்க இருப்பதாகவும், நாளை மறுநாள் டெல்லியில் அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவ்விழாவில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி , மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
source https://news7tamil.live/an-enthusiastic-welcome-to-chief-minister-mk-stalin-in-delhi.html
இருவாச்சி பறவைகளை தத்தெடுக்கும் நியிஷி பழங்குடிகள்; வேட்டைக்காரர்களே பாதுகாவலர்களாக மாறிய அதிசயம்
இந்தியா போன்ற ஒரு பல கலாச்சாரங்களை கொண்ட நாடுகளில் இருக்கும் ஒவ்வொரு இயற்கைச் சூழலும் தன்னகத்தே சிறந்த, தனித்துவம் மிக்க உயிரினங்களைக் கொண்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நீலகிரி வரையாடு, நீலகிரி சோலைக்கிளி, நீலகிரி மார்டின், செந்நாய் போன்றவை எல்லாம் மேற்குத் தொடர்ச்சி மண்ணிற்கே உரிய உயிரினங்கள்.
ஒரு சில உயிரினங்களின் சில குறிப்பிட்ட பிரிவுகள் அண்டை நாடுகளிலும் வாழும். உதாரணத்திற்கு இருவாச்சி பறவை. இந்தியன் கிரேட் ஹார்ன்பில் மேற்குத் தொடர்ச்சி மலையில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் அதிகம் காணப்பட இதன் சில பிரிவுகளான ஓரியண்டல் பைட் ஹார்ன்பில், ரீத்ட் ஹார்ன்பில் போன்றவை அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் காணப்படுகிறது.
இருவாச்சிப் பறவைகளின் அலகுகள் மிகவும் அழகானவை. அப்பறவைகள் வேட்டையாடப்பட்டு அதன் அலகை தலையில் கிரீடமாக சூடிக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டவர்கள் நியிஷி பழங்குடியினர். அருணாச்சலப் பிரதேசத்தில் இந்த பறவைகளின் எண்ணிக்கை குறைந்து போனதற்கு மிக முக்கிய காரணமாக வேட்டையாடுதல் கூறப்பட்டது.
ஆனால் இன்று இம்மக்கள் தங்களால் இயன்ற அளவு இருவாச்சிப் பறவைகளை பாதுகாக்கின்றனர். ஒரு சிலர் தத்தெடுத்துக் கொள்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு, அழிவின் விளிம்பில் இருக்கும் ஹார்ன்பில் எனப்படும் இருவாச்சிப் பறவைகளை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் வெற்றிப் பயணத்தை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
Hornbill Nest Adoption Program
அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள பக்கே புலிகள் காப்பகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் ஹார்ன்பில் பறவைகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு 2012ல் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் இருவாச்சிப் பறவைகளின் கூடுகளை தத்தெடுக்கும் Hornbill Nest Adoption Program திட்டம். கிரேட் ஹார்ன்பில் (Great Hornbill), ரூஃபஸ்-நெக்ட் ஹார்ன்பில் (Rufous-necked hornbill), ரீத்ட் ஹார்ன்பில் (Wreathed Hornbill) மற்றும் ஓரியண்டல் பைட் ஹார்ன்பில் (Oriental Pied Hornbill) போன்ற 4 இருவாச்சி பிரிவுகள் இப்பகுதியில் வசித்து வருகின்றன. இவற்றில் கடைசி மூன்றும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்புப் பட்டியலில் (IUCN Red List) அழியக் கூடிய தருவாயில் உள்ள பறவைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பக்கே புலிகள் காப்பகத்தில், இப்பறவைகள் கூடு கட்டும் ஒவ்வொரு மரமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மரத்தையும் பழங்குடி மக்கள் தத்தெடுத்து வருகின்றனர். மற்ற உயிரினங்கள் போன்றே, ஹார்ன்பில்களும் தங்களின் இனப்பெருக்க காலத்தின் போது, தலைமுறை தலைமுறையாக தங்களின் இனம் எந்த பாதுகாப்பான சூழலில் இனச்சேர்க்கை புரிந்து, ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கியதோ அதே இடத்திற்கு வலசை வருகின்றன. அப்படி வரும் ஹார்ன்பில்களின் மிக நீண்ட “அடை” காக்கும் காலம் முழுவதும், இக்கூட்டிற்கு எத்தகைய தீங்கும் ஏற்படாமல் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர் நியிஷி பழங்குடியினர்.
”நேச்சர் கான்சர்வேஷன் சொசைட்டி என்ற அரசு சாரா அமைப்பும் நிஷியி பழங்குடி தலைவர்களின் கவுன்சிலான கோரா அபே சொசைட்டியும் கூட்டு முயற்சியாக பறவைகளை பாதுகாக்கும் திட்டம் உருவானது” என்று இந்து நாளிதழில் ‘A new feather in his cap’ என்ற கட்டுரையில் எழுதியுள்ளார் கரிஷ்மா ப்ரதான்.
பணிகளும் சவாலும்
தாய்லாந்தில் உள்ள ஹார்ன்பில்களை பாதுகாக்கும் பொருட்டு பிலாய் பூன்ஸ்வாத் (Pilai Poonswad) மேற்கொண்ட இயக்கத்தை அடிப்படையாக கொண்டு இந்த தத்தெடுக்கும் இயக்கம் துவங்கப்பட்டது. ஹார்ன்பில்கள் தங்களின் குஞ்சுகளை பாதுகாக்க, தாயையும் சேயையும் மரங்கள் பாதுகாக்க, மரங்களை நியிஷி பழங்குடிகள் பாதுகாக்க, இந்த மொத்த திட்டத்திற்கான செலவுகளையும் தன்னார்வலர்களும் அமைப்புகளும் கவனித்துக் கொள்கின்றனர்.
பக்கே புலிகள் காப்பகத்தில் உள்ள மரங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டிருந்தாலும் கூட அதற்கு வெளியே, அதனை ஒட்டி அமைந்திருக்கும் ”பாப்பும்” காப்புக் காடுகளில் இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. 35க்கும் மேற்பட்ட மரங்களை தத்தெடுத்துள்ள நியிஷி மக்கள், சரியான நேரத்திற்கு இனச்சேர்க்கைக்காக பறவைகள் பக்கே புலிகள் காப்பகத்திற்கு வருகின்றதா என்ற ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். மேலும் அந்த மரங்களுக்கு எந்த விதமான பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வாரத்திற்கு ஒரு முறை காட்டுக்குள் பயணம் செய்கின்றனர். முட்டைகளின் எண்ணிக்கை, குஞ்சுகளின் எண்ணிக்கை, பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறும் அடுத்த தலைமுறை பறவைகளின் எண்ணிக்கை என்று அனைத்தையும் தரவுகளாக தொகுத்து வைத்துள்ளனர் இம்மக்கள்.
”2012ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு ஒரு குறிப்பிட்ட மரத்தில் உள்ள கூட்டில் இருவாச்சிகள் வந்து தங்குவதில்லை” என்று தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கரிஷ்மா, ”அந்த மரத்தைச் சுற்றி 2016ம் ஆண்டு அப்பகுதிக்கே உரிய மரங்களையும் செடிகளையும் வளர்க்க ஆரம்பித்தோம். விபத்து ஏற்பட்ட 10 ஆண்டுகள் கழித்து, அந்த மரங்களை நாடி பறவைகள் வருகின்றன” என்றும் மேற்கோள் காட்டியுள்ளார்.
போதுமான வேலை வாய்ப்புகள் மற்றும் வருமானம் இல்லாத காரணங்களால் அடர் காடுகளை நம்பியிருக்கும் பழங்குடி மக்கள் இந்த மரங்களை வெட்டி விற்பனை செய்து வருகின்றனர். இது பறவைகளுக்கும் பேராபத்தாய் போய் முடிகிறது. பழங்குடி மக்களுக்கு, காடுகளின் விவசாயிகளாக திகழும் ஹார்ன்பில்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்தி அவற்றை பாதுகாக்க கரம் கோர்ப்பது எளிமையான காரியம் இல்லை. இதுவரையில் 21 பேர் மரங்களை தத்தெடுத்துள்ளனர். 260 பேர் ஹார்ன்பில்களை தத்தெடுத்து, இந்த திட்டம் திறம்பட செயல்பட தேவையான நிதி உதவியை வழங்கி வருகின்றனர். அதனால் தான் இந்த திட்டம் இன்று பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.
Hornbill Nest Adoption Program திட்டத்திற்கு சான்சுவரி இந்தியா 2014, இந்தியா பயோடைவர்சிட்டி விருது 2016 ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருவாச்சி திருவிழா என்று நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டு அங்கே, சுற்றுலா விரும்பிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு இருவாச்சிப் பறவையின் தேவை மற்றும் பாதுகாப்பு குறித்து வகுப்புகள் எடுக்கப்பட்டன. பழங்குடிகள் இல்லாமல் எப்படி காடுகளை பாதுகாப்பது? பழங்குடி மக்களை நீக்கிவிட்டு, ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகள் ஏன் இத்தகைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறார்கள் என்பது போன்று சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். தாய்லாந்தில் இப்படி ஒரு திட்டம் வெற்றி அடையும் போது, அருணாச்சலப் பிரதேசத்தில் இத்தகைய திட்டம் ஒன்று கைகூடும் போது, உள்ளூர் பழங்குடி மக்களை உள்ளடக்கிய இது போன்ற பாதுகாப்பு திட்டங்களை ஏன் தமிழக வனத்துறையும அறிமுகம் செய்யக் கூடாது என்ற கேள்வியும் தற்போது எழுகிறது.
source https://tamil.indianexpress.com/science/hunter-tribes-in-arunachal-pradesh-turned-into-protectors-of-hornbills-431735/
‘இந்தியாவின் சாபக்கேடு சாதி’: கார்த்தி சிதம்பரம் ட்வீட் பின்னணி என்ன?
30 3 2022
Karthi Chidambaram tweets caste is the curse of india to pointing matrimony advertisement: திருமண வரன் தேடல் விளம்பரத்தில் சாதி குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டி, சாதி இந்தியாவின் சாபக்கேடு என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் பெரும்பாலும் திருமணங்கள் சொந்த உறவுகளுக்குள் அல்லது சொந்த சாதிக்குள்ளே நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக சாதிமறுப்பு மற்றும் சாதி கடந்த திருமணங்கள் அதிகரித்து வருகிறது. இந்த திருமண வரன் தேடல்களை பொறுத்தவரை உறவுகளுக்குள் எனும்போது அவர்களுக்காகவே பேசி முடித்துக் கொள்வார்கள். அதைதாண்டி வெளியில் செல்லும்போது, முன்னர் புரோக்கர்கள் மூலம் வரன் தேடி வந்தனர். அதன்பிறகான காலகட்டத்தில் நாளிதழ்களில் விளம்பரங்கள் கொடுப்பதன் மூலம் வரன் தேடி வருகின்றனர்.
இன்றைய இணைய காலகட்டத்தில் வரன் தேடலுக்கு இணையதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஓவ்வொரு சாதிக்கும் தனித்தனி இணையதளம் இருப்பது, இந்தியர்கள் இந்த தொழில்நுட்ப யுகத்திலும் இன்னும் சாதியைக் கடக்கவில்லை என்பதை உணர்த்துகிறது.
இதற்கிடையில் வரன் தேடல் அறிவிப்புகளில், குறிப்பிடப்படும் நிபந்தனைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகள் சில சமயம் சுவாரஸ்யமாக இருக்கும். இவற்றில் இணையதளங்களில் வெளியாகும் வரன் தேடல்கள் பொது பார்வைக்கு வருவதில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் நாளிதழ்களில் வெளியாகும் வரன் தேடல் அறிவிப்புகள் அனைவரின் கவனத்தையும் பெறுகின்றன.
அந்தவகையில் வெளியான ஒரு வரன் தேடல் அறிவிப்பைக் குறிப்பிட்டுதான் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், சாதி இந்தியாவின் சாபக்கேடு என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: எஸ்.பி.வேலுமணி ஊழல் வழக்கு; மேயர், அதிகாரிகளை சேர்க்க கோரிய மனு தள்ளுபடி
ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான அந்த வரன் தேடல் அறிவிப்பில், பீகாரில் பிராமணச் சமூகத்தைச் சேர்ந்த அபிநவ் குமார் என்ற 33 வயது பல் மருத்துவருக்கு பெண் தேடி வெளியான விளம்பரத்தில், பிராமண சமுதாயத்தை சேர்ந்த பெண் தேவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், பெண் பார்ப்பதற்கு அழகாகவும், லட்சணமாகவும், நேர்மையானவராகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும், அன்பானவராகவும், அரவணைக்கக்கூடியவராகவும், துணிச்சலானவராகவும், பலமானவராகவும், பணக்காரராகவும் இருக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவின் மீது அதீத தேசபக்தி உடையவராகவும் நாட்டின் இராணுவம் மற்றும் விளையாட்டுத் துறையின் திறனை மேம்படுத்துவதில் விருப்பம் உடையவராகவும், அதில் தீவிரமானவராகவும் அதே நேரம் இரக்கமுடையவராகவும் இருக்க வேண்டும். குழந்தை வளர்ப்பில் திறன்மிக்கவராகவும் நன்றாக சமைக்கத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். அவர் இந்திய இந்து பிராமண சமுதாயத்தை சேர்ந்த வேலை பார்க்கக் கூடிய (மணமகன் தற்போது வேலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது) பீகார் அல்லது ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குறிப்பாக ஜாதக ஜோதிட பொருத்தங்கள், 36 குணங்கள் ஒத்துப்போக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரன் தேடும் அறிவிப்பு சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பைப் பகிர்ந்து தான் கார்த்தி சிதம்பரம், ”சாதி இந்தியாவின் சாபக்கேடு” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/karthi-chidambaram-tweet-against-caste-432969/
புதன், 30 மார்ச், 2022
திரையரங்குகளில் திரையிட அனுமதிக்கக் கூடாது
தி காஷ்மீர் பைல்ஸ் - இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் - தடை விதிக்க SDPI கட்சி மாவட்ட ஆட்சியர் & மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு
வெறுப்பை விதைக்கும், சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் திரையிட அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து, புதுக்கோட்டை எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக இன்று 29.03.2022 மனு அளிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். விசுவாசி அக்னி கோத்ரி இயக்கியுள்ள தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற இத்திரைப்படம் இந்தியா முழுவதும் திரையிடப்பட்டு கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க மத நல்லிணக்கத்திற்கு எதிராகவும், இந்து-முஸ்லீம் சமூகத்தினுடைய ஒற்றுமையை சீர்குலைக்கும் வண்ணமாக, பொய்யான கருத்துக்களை மையப்படுத்தி வெளியிட்டிருக்கிறது. எனவே, இத்திரைப்படத்தை புதுக்கோட்டை மாவட்ட திரையரங்குகளில் திரையிட தடை விதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது கட்சியின் மாவட்டத் தலைவர் ஸலாஹுவுதீன் அவர்கள் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் ஜகுபர் அலி மாவட்ட செயலாளர் முஹம்மது அலி ஜின்னா , மாவட்ட பொருளாளர் ஹசனுதீன் மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஷேக் அலாவுதீன் மற்றும் மாவட்ட சுற்றுசூழல் அணி தலைவர் சிராஜூதீன் & ஆடிட்டர் அமானுல்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வெளியீடு
சமூக ஊடக அணி
புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்
தமிழகத்தில் ரமலான் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு
தமிழகத்தில் ரமலான் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு
கடந்த 04.03.2022 வெள்ளிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷஃபான் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 02.04.2022 சனிக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்
அன்று பிறை தென்பட்டால் ரமலான் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.
பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்
தொடர்புக்கு
75502 77335
99520 35444
99520 56444
இப்படிக்கு
மாநிலத் தலைமையகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ராணுவப் படைகள் குறைக்கப்படும்; ரஷ்யா அறிவிப்பு
30 3 2022 உக்ரைன் தலைநகரில் குவிக்கப்பட்ட ராணுவப் படைகள் குறைக்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் ஒருமாதத்தை கடந்து சண்டை நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் இருந்து பல லட்சம் மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனிடையே இருநாடுகளிடையே போர் நிறுத்த அமைதி பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.
இந்நிலையில், துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில், உக்ரைன் – ரஷ்யா அதிகாரிகள் பங்கேற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டு உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதன்படி, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள தங்கள் நாட்டுப் படைகளை குறைக்கப்பதாக ரஷ்யா உறுதி அளித்துள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற போரின் தீவிரம் குறையும் சூழல் உருவாகியுள்ளது.
source https://news7tamil.live/armed-forces-will-be-reduced-russia-announcement.html
அனைத்து கட்சிகளுக்கு மம்தா அழைப்பு
பாஜக அரசுக்கு எதிராக, அனைத்து எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் ஒன்றிணைய வேண்டுமென, தமிழ்நாடு உட்பட பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு அமலாக்கத்துறை, CBI, மத்திய ஊழல் தடுப்பு பிரிவு, வருமான வரித்துறை ஆகியவற்றை தனது சுய லாபத்துக்காக பயன்படுத்தி வருவதாகவும், இவற்றை பயன்படுத்தி பாஜக அரசு, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு குடைச்சல் தருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, CBI, அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவி காலத்தை நீட்டித்து மசோதாவை நிறைவேற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், நீதித்துறையின் சில இடங்களில் பாஜக ஆதிக்கம் செலுத்துவதால், சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக கட்டமைப்பை சீர் குலைக்கும் வகையில் பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு எதிராக, பாஜக அல்லாத அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
source https://news7tamil.live/mamata-letter-to-all-parties-in-india-to-take-action-against-bjp.html