1 3 2022
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா 6-வது நாளாக உக்ரைன் மீது தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், உக்ரைனில் உள்ள வெளிநாட்டு குடிமக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் இன்று நடைபெற்ற ஷெல் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் (எம்இஏ) செய்தியாளர் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டர் பக்கத்தில்.“இன்று காலை கார்கிவ் நகரில் நடந்த ஷெல் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம். அவரது குடும்பத்தினருடன் அமைச்சகம் தொடர்பில் உள்ளது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் மரணமடைந்த மாணவர் கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் சேகரப்பா ஞானகவுடர் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கார்கிவில் உள்ள கார்கிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்துள்ளார். “உக்ரைன் நேரப்படி இன்று காலை 10.30 மணியளவில் ரஷ்ய ராணுவம் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அவர் மளிகை கடை முன்பு வரிசையில் நின்றிருந்த நவீன் மரணமடைந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை அவரது உடல் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை.
மேலும் தற்போது எங்களில் எவராலும் மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை, என்பதால் நவீன் உடல் குறித்து எங்களுக்கு எவ்வித தகவலும் தெரியவில்லை என்று நவீனின் ஹாஸ்டல் மேட்டாக இருந்த ஸ்ரீதரன் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய சென்னையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், தங்கள் ஹாஸ்டல் பதுங்கு குழியில் தஞ்சமடைந்துள்ளதாகவும், தங்களை வெளியேற்றும் திட்டம் குறித்து எந்த செய்தியும் இல்லை என்றும் கூறிய அவர் இந்திய அதிகாரிகளிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை,” என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில். நவீன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மாணவனின் பெற்றோரிடம் ஆறுதல் கூறியுள்ளார் மேலும் அவரது உடலை இந்தியா கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இது குறித்து எம்இஏ செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், கார்கிவ் மற்றும் பிற மண்டலங்களில் உள்ள நகரங்களில் இருக்கும் இந்திய நாட்டினருக்கு அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்:டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ரஷ்யா மற்றும் உக்ரைன் தூதர்களிடம் மீண்டும் வலியுறுத்துவதாக வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறியுள்ளார்
இது தொடர்பாக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டர் பதிவில், “மாணவர்கள் உட்பட அனைத்து இந்திய புடிமக்களும் இன்று அவசரமாக கெய்வை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள். கிடைக்கக்கூடிய இரயில்கள் மூலமாகவோ அல்லது கிடைக்கக்கூடிய வேறு வழிகள் மூலமாகவோ வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/tamil-indian-student-killed-in-shelling-in-ukraines-kharkiv-418811/