1 3 2022

Tamilnadu CM Stalin Birthday : தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில். அவருக்கு வாழ்த்து தெரிவித்த அறப்போர் இயக்கத்தில் ஜெயராமன் வெங்கடேன் கூடவே விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நாளை விமர்சையாக கொண்டாடி வரும் திமுகவினர், ஸ்டாலின் கட்டவுட், பட்டாசு பொதுமக்களுக்கு இனிப்பு என வெகு சிறப்பான முறையில் கொண்டாடி வருகினறனர். மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கு தலைவர் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகினறனர்.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தனது குடுமு்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய அறப்போது இயக்கத்தில் ஜெயராமன், வெங்கடேசன் முதல்வர் குறித்து தனது விமர்சனத்தையும் முன்வைத்துள்ளது தற்போது வைரலாக பரவி வருகிறது.
இது தொடர்பாக ஜெயராமன் வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை டிடிகே சாலையில் நடப்பட்ட திமுக கொடி தொடர்பான புகைப்படத்துடன், முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ள அவர், சாலையில் நடப்பட்டுள்ள கொடியினால் பொதுமக்களுக்கு ஆபத்து என்று கூறியுள்ளார். முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து விட்டு கூடவே விமர்சனம் செய்தது திமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவறை சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. ஆனால் வாழ்த்தையும் சொல்லிவிட்டு அதே பதிவில் தவறையும் விமர்சிப்பது என்ன நாகரீகம் என்று திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில், புதுக்கோட்டை எம்எல்ஏ விஜயபாஸ்கரும் பெரிய கட் அவுட் வைத்திருக்கிறார் அது குறித்து ஜெயராமன் கேள்வி எழுப்பவில்லை என்று கேட்டு வருகினறனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-stalin-birth-wish-arapor-iyakkam-jayaram-wishing-418895/