1 3 2022
அதிபர் புதின் அறிக்கை ரஷ்யாவின் அணுசக்தி எச்சரிக்கை குறித்து இருந்தபோதிலும், மாஸ்கோ உண்மையில் அணு ஆயுதப் போரைத் தொடங்குவது சாத்தியமில்லை என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஆனால், புதினின் நிலையற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, அவரது அச்சுறுத்தல்களையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறுகின்றனர்.
உக்ரைனில் நடைபெறுகிற போர், நாட்டின் மேற்கு எல்லைகளில் அகதிகள் மற்றும் கீவ் மீதான ரஷ்ய தாக்குதல்கள் அகியவை பற்றிய செய்திகளுக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஞாயிற்றுக்கிழமை அறிக்கையை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கை உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய ராணுவத்தின் தடுப்புப் படைகளை ஒரு சிறப்புப் ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுத்துமாறு பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ரஷ்ய ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்களின் தலைவருக்கு நான் உத்தரவிடுகிறேன்” என்று புதின் ஒரு தொலைக்காட்சி உரையில் கூறினார்.
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஞாயிற்றுக்கிழமை பேட்டியி கூறுகையில், “புதின் ரஷ்யாவின் அணுசக்தித் திறனைப் பற்றிக் கூறுவது அவர் எடுக்க வேண்டிய தேவையற்ற நடவடிக்கை மட்டுமல்ல, மேலும் ஒரு தீவிரமான நடவடிக்கையாகும்” என்று கூறினார். நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் இந்த உத்தரவை பொறுப்பற்றது என்று அமெரிக்க செய்தி நிறுவனமான சி.என்.எந் இடம் கூறினார். மேலும், அவர், இது ஆபத்தான சொல்லாட்சி என்று கூறினார்.
ஆனால், ரஷ்யாவின் ராணுவ உத்தி முன்னோக்கிச் செல்வதற்கான நடைமுறை ரீதியாக இந்த அறிக்கையின் அர்த்தம் என்ன என்பது பற்றிய தெளிவான புரிதல் இல்லை.
“இதில் உள்ளடங்கியுள்ள எச்சரிக்கை என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை” என்று அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பில் அணுசக்தி தகவல் திட்டத்தின் இயக்குனர் ஹான்ஸ் கிறிஸ்டென்சன் டியூஸ்ட்ச் வேலே-க்கு மின்னஞ்சலில் எழுதியுள்ளார்.
“ஒரு ஏவுகணை உத்தரவை அனுப்ப தயாராக இருக்க அணுசக்தி கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் தயார்நிலையை அதிகரிப்பதை உள்ளடக்கியதாக ஊகங்கள் உள்ளன. ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்களின் செயல்பாடு அதிகரித்ததாக சில அறிக்கைகள் உள்ளன. ஆனால், அது வழக்கத்திற்கு அப்பாற்பட்டதா என்பது தெளிவாக இல்லை.”
நேட்டோ-ரஷ்யா மோதல்கள் பற்றிய ‘ஏற்றுக்கொள்ள முடியாத’ அறிக்கைகள்
ரஷ்ய மற்றும் நேட்டோ துருப்புக்களுக்கு இடையில் சாத்தியமுள்ள மோதல்கள் குறித்து மேற்கத்திய நாடுகளின் அறிக்கைகளுக்கு எதிர்வினையாக அணுசக்தி படைகளை அதிக எச்சரிக்கையில் வைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்று கிரெம்ளின் கூறியுள்ளது.
“நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே சாத்தியமுள்ள மோதல் அல்லது சண்டைகள் குறித்து பல்வேறு மட்டங்களில் பல்வேறு பிரதிநிதிகளால் அறிக்கைகள் வெளியிட்டப்பட்டன” என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் திங்கள்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். “இத்தகைய அறிக்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று அவர் கூறினார்.
இதில் பெஸ்கோவ் எந்த அறிக்கைகளைக் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் நேரடியாகக் குறிப்பிட்ட மேற்கத்திய அரசியல்வாதி பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி லிஸ் ட்ரஸ் ஆவார். ஆனால், ட்ரஸ் அல்லது மற்ற மேற்கத்திய அல்லது நேட்டோ பிரதிநிதிகள் நேட்டோ ரஷ்ய துருப்புக்களை தாக்குவது பற்றி பேசவில்லை.
ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் ரஷ்யா மீது இதுவரை கண்டிராத கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்த பிறகு, ரஷ்யா அணுசக்தி சக்தி மிக்க நாடு என்பதை உலகுக்கு நினைவூட்டும் வகையில் புதின் தனது சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
“புதின் தனக்கு சலுகைகளை வழங்குவதற்காக மேற்கு நாடுகளை பயமுறுத்துவதற்காக இதைச் செய்கிறார்” என்று கிறிஸ்டென்சன் எழுதினார். “இது அவரது வழக்கமான வளைந்து கொடுக்கும் தன்மை.” என்று கூறினார்.
இதுவரை நடந்த போரில் வெற்றி பெறாததால் இந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படலாம் என்று சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்டு செயல்படும் ஒரு சர்வதேச அறக்கட்டளையான ஜெனீவா பாதுகாப்புக் கொள்கைக்கான ஆயுதப் பெருக்கப் பிரிவின் தலைவர் மார்க் ஃபினாட் கூறுகிறார்.
புதினின் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள காரணம் எதுவாக இருந்தாலும், ஐரோப்பாவில் அமெரிக்க ஆயுதப் படைகளின் உத்தரவு அதிகாரியாகப் பணியாற்றிய ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ ஜெனரல் பென் ஹோட்ஜஸ், இந்த வார்த்தைகளால் வியப்படையவில்லை என்று கூறினார்.
“நிச்சயமாக, இதில் அவருக்கு எந்த செலவுமில்லை. அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை அச்சுறுத்துவதற்கு எதுவும் இல்லை” ஹோட்ஜஸ் டியூஸ்ட்ச் வேலே-இடம் கூறினார். இருப்பினும், உண்மையான அணுசக்தி தாக்குதல் வேறு செய்தியாக இருக்கும் என்றார். “அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கு அவர்கள் பயங்கரமான கணக்கீடு செய்தால், அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, அது புதி மற்றும் ரஷ்யாவுக்கு செலவாக இருக்கும்” என்று கூறினார்.
ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுதுவதற்கான நான்கு விஷயங்கள்
புதின் ரஷ்ய படைகளை ஒரு சிறப்பு ராணுவ நடவடிக்கையில் வைப்பது, அணு ஆயுதப் போரை அறிவிப்பதில் இருந்து ஒரு கடைசி படியாக மட்டுமே பரவலாகக் கருதப்படவில்லை.
2020-ல் புதின் தானே அங்கீகரித்த ரஷ்யாவின் அணுசக்தி கோட்பாடு, நான்கு நிகழ்வுகளில் ஒன்றில் மட்டுமே நாடு அணுசக்தி தாக்குதல்களை நாட வேண்டும் என்று கூறுகிறது: ரஷ்யா அல்லது நட்பு நாடுகளின் மீது பால்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டபோது, எதிரி அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது, ரஷ்ய அணு ஆயுத தளத்தின் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக அல்லது ரஷ்ய அரசின் இருப்பை அச்சுறுத்தும் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இருந்தது.
உக்ரைனுக்கு எதிரான போரில் இவை எதுவும் இல்லை.
“புதின் உண்மையிலேயே அணு ஆயுதத் தாக்குதலைத் திட்டமிட்டிருந்தால், யுத்த களத்தில் பறக்கும் ஏவுகணைகள் சிதறடிக்கப்படுவதையும், அனைத்து நீர்மூழ்கிக் கப்பல்களையும் கடலுக்கு அனுப்புவதையும் நாம் பார்க்கலாம். குண்டுவீச்சுகள், ஆயுதங்களைக் குவிப்பது, அணுசக்தி அல்லாத உத்தி சக்திகளை செயல்படுத்துவதையும் நாம் பார்க்கலாம்” என்று கிறிஸ்டென்சன் எழுதினார். “ரஷ்யாவும் நேட்டோவும் நேரிடையாக ராணுவ மோதலில் ஈடுபட்டால் ஒழிய, ஒரு ஏவுகணை தாக்குதல் சாத்தியமில்லை.” என்று கூறினார்.
நேட்டோ கூட்டணியில் அங்கம் வகிக்காத மற்றும் அணு ஆயுதங்கள் இல்லாத நாடான உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படுவது சாத்தியமற்றது என நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.
“இதில் எந்த பொருளும் இல்லை” என்று ஃபினாட் சுட்டிக்காட்டினார். “உக்ரைனைக் கைப்பற்றுவதே இலக்காக இருந்தால், கதிரியக்க கழிவுகளின் குவியலை ரஷ்யா ஆக்கிரமிக்க விரும்பியிருக்காது” என்று கூறினார்.
புதின் எங்கே நிறுத்துவார்?
சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டைன் லாம்ப்ரிச்ட், “புதினின் அச்சுறுத்தல் வெளியே தெரியும்படி காட்டிக்கொள்வது போன்றது” என்று திங்கள்கிழமை கூறினார்.
“இருப்பினும், புதின் எந்த அளவுக்கு அவர் கணிக்க முடியாதவர் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதனால்தான், நாம் இப்போது மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று ஜெர்மனியின் பொது வானொலியான டியூஸ்ச்ட் லேண்ட்ஃபன்க்-கிற்கு லாம்ப்ரிச்ட் கூறினார்.
ஃபினாட்டும் அதே கருத்தை கூறுகிறார். அமெரிக்கா அவர்களின் எச்சரிக்கை அளவையும் உயர்த்துவதன் மூலம் கடுமையாக பதிலளிக்கவில்லை. மாறாக மிகவும் மிதமான எதிர்வினையைக் காட்டியதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். இதுபோன்ற நடத்தை மேலும் அதிகரிப்பதை எவ்வாறு தடுப்பது என்பதைக் காட்டுகிறது என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/explained/russia-ukraine-crisis-how-serious-are-vladimir-putins-nuclear-threats-418984/