திங்கள், 3 அக்டோபர், 2022

வாழ்வாதாரத்தை அழிக்கும் விமான நிலையம் வேண்டாம்; கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

 

எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் புதிய விமான நிலையம் எங்கள் பகுதிக்கு வேண்டாம் என ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.

சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் கிராமத்தை மையமாக வைத்து 13 கிராமங்களில் அமைய உள்ளது. இதனைக் கண்டித்து 13 கிராமத்தைச் சேர்ந்த மக்களும் தங்கள் பகுதியில் புதிய விமான நிலையம் வேண்டாம் எனத் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

ஏகனாபுரம் கிராமத்தில் புதிய விமான நிலையம் அமைய உள்ளதைக் கண்டித்து 68 நாட்களாகத் தொடர் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர் .கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று நடந்த சிறப்புக் கிராம சபை கூட்டத்தில் எங்கள் பகுதிக்கு விமான நிலையம் வேண்டாம் எனக் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.

 வாழ்வாதாரத்தை அழிக்கும் விமான நிலையத்தை எதிர்த்து இன்று இரண்டாவது முறையாகக் கிராமசபைக் கூட்டம் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில், எங்கள் குடியிருப்பு பகுதிகளையும், நீர் ஆதாரங்களையும், விவசாய நிலங்களையும் அழிக்கும் விமான நிலையம் வேண்டாம் எனத் தீர்மானம்  இயற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ஏகனாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சண்முகம் மற்றும்  பொதுமக்கள் முன்னிலையில் தீர்மானம் இயற்றப்பட்டது.

source https://news7tamil.live/we-dont-want-an-airport-that-destroys-livelihoods-resolution-in-gram-sabha-meeting-2.html