புதன், 5 அக்டோபர், 2022

சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்ததால் தமிழகம் பாதுகாப்பாக உள்ளது’- இயக்குனர் வெற்றிமாறன் பேச்சு

 2 10 2022

‘சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்ததால் தமிழகம் பாதுகாப்பாக உள்ளது’- இயக்குனர் வெற்றிமாறன் பேச்சு

சினிமாவை அரசியல்படுத்த வேண்டியது முக்கியம், சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்ததனால்தன் தமிழகம் பாதுகாப்பாக உள்ளது என்று இயக்குனர் வெற்றிமாறான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி குறும்பட, ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன்,
“அசுரன் படம் எடுப்பதற்கு முன் அரசியல் ரீதியாக எதுவும் தவறாகிவிடக் கூடாது என்பதற்காக அப்போது நான் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்தேன். இதுபோன்ற பிர்ச்சினைகளை கையாளும்போது எதனை முதன்மைப்படுத்த வேண்டும் எனக் கேட்டிருந்தேன்.

அதற்கு அவர், தனிமனிதனால் சமூகத்திற்கு தீர்வு கிடைக்கும் என சினிமாவில் சொல்லாதீர்கள். அதே தவறு தான் நிகழ்கிறது. அமைப்பாக திரள வழிசெய்யுங்கள் என்றார். மேலும், கலை என்பது ஒரு அரசியல். நாம் தெரிந்தோ, தெரியாமலோ அரசியலுக்குள் தான் இருக்கிறோம் என திருமாவளவன் சொல்லியிருந்தார்.
இலக்கியம், சினிமா எப்படி அவர்கள் கையில் இருந்தது. அந்த தமிழ் சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்ததால் தான் தமிழ்நாடு ஒரு மதச்சார்பற்ற நாடாக மாறியுள்ளது. அதனால்தான் வெளிப்புற ஆதிக்கத்தை எதிர்க்கும் பக்குவத்தையும் சினிமா பெற்றுள்ளது என நினைக்கிறேன். சினிமா என்பது வெகுமக்களை மிக எளிமையாக சென்றடையும் கலைவடிவம்.

சினிமாவை அரசியல்மையப்படுத்த வேண்டியது முக்கியம். சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுக்கும்போது, கலை கலைக்கானது தான் எனப் பேசினார்கள். மக்களை பிரதிபலிப்பது தான் கலை என உணர்த்தினார்கள். அந்த கலையை நாம் சரியாக கையாள வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே நம்மிடமிருந்து அடையாளங்களை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது.

சினிமாவிலும் அடையாளங்கள் பறிக்கப்படுகின்றன. இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும். நடக்கவிருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணியே இதற்கெல்லாம் ஒரு உதாரணம் தான் என நினைக்கிறேன். நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நான் என்னால் முடிந்த பங்களிப்பைக் கொடுப்பேன்” என்று வெற்றிமாறன் கூறினார்.


source https://tamil.indianexpress.com/entertainment/vetrimaaran-says-tamilnadu-are-safe-because-dravidian-movement-undertake-cinema-519380/

Related Posts:

  • குவைத்தில் புதிய நெருக்கடி குவைத்தில் புதிய நெருக்கடி - மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க தமுமுக கோரிக்கைவளம் கொழிக்கும் குவைத் நாட்டிற்கு வந்து தன வளத்தை பெருக்குவதற்கு மட… Read More
  • Riddance Advani Places affected and loss of life during Advani's rath yatra. Good Riddance Advani . You and under your leadership, RSS/VHP/Bajrang goons communally… Read More
  • பவிஷ்ய புராணா ஹிந்து வேதங்களில் இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி என்ன சொல்லப் பட்டிருக்கிறது ?--------------------------------------------------------… Read More
  • Dr Zakir Lecture Picture taken - Yesterday (9th June) @ Abuja National Stadium, when Dr Zakir arrived for the lecture. The lectures on "Concept of God in Major … Read More
  • Anti-Muslim attacks There has been a worrying rise in anti-Muslim attacks in the UK. It's happening in the wake of the murder of the British soldier, Lee Rigby… Read More