புதன், 5 அக்டோபர், 2022

இதை ஆன்லைனில் செய்ய முடியாது: ஆதார்- மொபைல் எண் இணைப்பு எப்படி?

 

இந்தியாவில் உள்ள அனைவருக்குமே ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாகும். ஆதார் கார்டு இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறமுடியாது. பிறந்த குழந்தை முதல் இறப்பு சான்றிதழ் வாங்குவது வரை ஆதார் கார்டு மிக அவசியமான ஒன்றாகும். ஆதார் கார்டு இருந்தால்தான் கொரோனா தடுப்பூசியே போடமுடியும். அந்த அளவுக்கு ஆதார் கார்டு படிப்படியாக ஒவ்வொரு விஷயமாகக் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

ஆதார் கார்டில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அவற்றை நீங்கள் பொதுச் சேவை மையங்களில் திருத்திக் கொள்ளலாம். ஆன்லைன் மூலமாகவும் நீங்கள் அப்டேட் செய்ய முடியாது. அதற்கான வசதியை ஆதார் அமைப்பு (UIDAI) வழங்கியுள்ளது.

இந்நிலையில் அருகில் இருக்கும் ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். யுஐடிஏஐ (UIDAI)  இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இந்நிலையில் ”அப்டேட்  யுவர் அட் ஆதார்”  (Update Your Aadhaar at Update) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

இந்நிலையில் உங்களது பகுதியில் உள்ள ஆதார் சேவை மையத்தை தேர்வு செய்ய வேண்டும்.

பின்பு அங்கு சென்று உங்களது தொலைபேசி எண்ணை வழங்க வேண்டும். உங்களுக்கு ஒரு ரெசிப்ட் வழங்கப்படும். அதில் யுஆர்என் எண்கள் இருக்கும். ரூ. 50 ரூபாய் நீங்கள் சேவை கட்டணமாக செலுத்த வேண்டும். 90 நாட்களுக்குள் உங்களது மொபைல் எண் அப்டேட் ஆகியிருக்கும்.   

source https://tamil.indianexpress.com/technology/how-to-update-mobile-number-on-your-aadhaar-card-520359/