செவ்வாய், 18 அக்டோபர், 2022

ஒரு பக்கம் சிறியது; மறுபக்கம் பெரியது… மார்பக அளவு வித்தியாசம் ஆபத்தா?

 மார்பக அளவுகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஆனால் மார்பகங்கள் ஒன்றுக்கொன்று அளவு மாறுபடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நிபுணர்கள் இதை இயல்பானது என்று அழைத்தாலும், மார்பக அளவுகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டால் கவனமாக இருக்க வேண்டும்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் dr_cuterus என்று பிரபலமாக அறியப்படும் டாக்டர் தனயா, சமச்சீரற்ற மார்பக அளவுகளைப் பற்றிப் பேசிய ஒரு பதிவு கவனத்துக்கு வந்தது. “ஒரு மார்பகம் மற்றொன்றை விட பெரியதாக இருப்பது முற்றிலும் இயல்பானது. பொதுவாக, பெரும்பாலானவர்களுக்கு, இடது மார்பகம், வலது மார்பகத்தை விட பெரியதாக இருந்தால், சாதாரணமானது” என்று அவர் வீடியோவில் கூறினார்.

அந்த வித்தியாசம் ஒரு சுற்று அளவுக்கு பெரியதாக இருக்கலாம், ஆனால் மார்பகங்களின் அளவு திடீரென மாறினால், மருத்துவரை அணுக வேண்டும் என்று எச்சரித்தார். மார்பகங்கள் சகோதரிகள், இரட்டையர்கள் அல்ல என்று மருத்துவர் நகைச்சுவையாகக் கூறினார்.

நொய்டாவில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ மூத்த ஆலோசகர் டாக்டர் நேஹா குப்தா இதை ஒப்புக்கொண்டு, “ஹார்மோன் மாற்றங்கள், பருவமடைதல் மற்றும் அதிர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மார்பகத்தின் அளவை பாதிக்கலாம்” என்று கூறினார்.

“ஆனால், மார்பகங்களில் – அளவு, அடர்த்தி அல்லது வடிவத்தில் – முன்னர் இல்லாத ஒழுங்கற்ற மாற்றங்களைக் கண்டால், அல்லது முலைக்காம்பிலிருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டால் அல்லது மார்பகத்தின் மேல் தோலில் புண்கள் இருந்தால், மருத்துவரை அணுக வேண்டும்.” என்று டாக்டர் குப்தா indianexpress.com கூறினார்.

இருப்பினும், மார்பகங்கள் எப்போதும் சீரற்ற அளவில் இருந்தால், கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. மார்பகத்தின் அளவு தாய்ப்பால் கொடுப்பதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது அல்லது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்காது என்று டாக்டர் குப்தா கூறினார். “பருவமடையும் போது மார்பகத்தின் அளவு சமச்சீரற்றதாக இருந்தால், அது அப்படியே இருக்க வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார். அவர்களுக்கு சிகிச்சையளிக்க எந்த மருத்துவ காரணமும் இல்லை. மார்பக அளவில் எந்தவொரு தொந்தரவான வேறுபாட்டையும் சரிசெய்ய ஒப்பனை அறுவை சிகிச்சை செய்யத் தேவையில்லை என்று கூறினார்.

மேலும், ஏதேனும் புதிய மாற்றங்களைச் சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் டாக்டர் குப்தா, மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்ய மேமோகிராபி பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இளம் பெண்களில் “மார்பகத்தின் அல்ட்ராசவுண்ட் எந்த தீங்கற்ற காயத்தையும் அடையாளம் காண முடியும், மேலும் பயாப்ஸி எந்த வீரியம் மிக்க மாற்றங்களையும் வெளிப்படுத்தும்” என்று கூறினார்.

மார்பகங்களை அவர்களே பரிசோதனை செய்து கொள்ளுமாறு பெண்களை வலியுறுத்தும் டாக்டர் குப்தா, “ஒவ்வொரு பெண்ணும் தனது மார்பகத்தின் தோற்றம் மற்றும் உணர்வை அறிந்து கொள்ள வேண்டும். அதனால், கவனிக்கப்படும் எந்த மாற்றங்களுக்கும் கருத்து கேட்கலாம். மார்பக புற்றுநோய் இதற்கு முன்னர், குடும்பத்தில் யாருக்கேனும் இருந்திருந்தால், உடல் பருமன் மற்றும் ஆல்கஹால் ஆகியவை மார்பக புற்றுநோய்க்கான சில ஆபத்து காரணிகள் என்று டாக்டர் குப்தா கூறினார்.

source https://tamil.indianexpress.com/lifestyle/unequal-breast-size-puberty-health-526957/