9 11 2022
ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைனில் கடந்த 6 மாதங்களில் 50 லட்சம் ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாதிமிர் செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
எகிப்தில் நடைபெற்று வரும் காலநிலை மாற்ற 27 வது உச்சி மாநாட்டில் காணலி வாயிலாக உக்ரைன் அதிபர் விளாதிமிர் செலன்ஸ்கி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், காலநிலை மாற்றத்துக்கு எதிராக உலகம் போராடுவதை ரஷ்ய போர் தடுப்பதாகவும் திசை திருப்புவதாகவும் குற்றம் சாட்டினார். பூமியில் அமைதி இல்லாமல், எந்த வித பயனுள்ள கால நிலை மாற்ற கொள்கைகளையும் நடைமுறை படுத்த முடியாது எனவும் அவர் எச்சரித்தார்.
மேலும், புவி வெப்பமயமாவதை தடுத்திட உலக தலைவர்கள் புதை படிவ எரிபொருளை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தி வரும் நிலையில் ரஷ்யா நடத்தும் போர் பல்வேறு நாடுகளை மீண்டும் நிலக்கரி சார்ந்த ஆற்றலை நோக்கி நகர்த்தி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாத்திமிர் புதினின் போர் நடவடிக்கையால் உக்ரேனில் கடந்த ஆறு மாதங்களில் 50 லட்சம் ஏக்கர் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் உக்ரேன் அதிபர் விளாதிமிர் செலன்ஸ்கி குற்றம்சாட்டினார்.
source https://news7tamil.live/deforestation-of-50-lakh-acres-in-ukraine-blamed-on-russia.html