வியாழன், 10 நவம்பர், 2022

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின்கட்டணம் குறைப்பு

 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான உச்சபட்ச நேர மின்கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சிறு, குறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை குறைக்கும்படி தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஏற்று குறைந்தழுத்த மின் இணைப்பு கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டணத்தை குறைப்பதால் தமிழ்நாட்டில் உள்ள குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும் எனவும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/electricity-bill-reduction-for-msmes.html

Related Posts: