சனி, 5 நவம்பர், 2022

எம்.எல்.ஏ.க்கள் விலைபேசும் போக்கு நாட்டுக்கே ஆபத்து” – டி.ஆர்.பாலு

 

தெலங்கானாவில் எம்.எல்.ஏ.க்கள் விலை பேசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு  தொடர்பாக டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி என்ற பெயரை அண்மையில் தேசிய கட்சியாக பாரத ராஷ்டிர சமிதி என்று மாற்றினார். இந்த நிலையில் தனது கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பாஜக சதித்திட்டம் போட்டிருப்பதாகவும், எம்.எல்.ஏ.க்களுக்கு தலா 100 கோடி ரூபாய் என பாஜகவினர் பேரம் பேசியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார் சந்திரசேகரராவ். அதுதொடர்பான வீடியோ ஆதாரம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு. அவர் வெளியிட்ட அறிக்கையில், “மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்பு என்பது ஒன்றிய அரசின் ஆயுதமாவது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது என்று கூறியுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில், பாஜகவின் தேசியத் தலைவர்களின் பெயர்களைச் சொல்லியே விலை பேசப்பட்டிருப்பது குறித்தும், வெளிப்படையான பேரம் – எதிர்காலச் சலுகைகள் குறித்த உத்தரவாதம் அளித்தல் என அனைத்துவிதமான சட்டவிரோதச் செயல்பாடுகளைப் பற்றிய பேச்சுவார்த்தைகளும் இதில் வெளிப்படுவதால் முழுமையான விசாரணை மூலம் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என திமுக வலியுறுத்துகிறது எனவும் தனது அறிக்கையில் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.


source https://news7tamil.live/bjps-tendency-to-bargain-is-a-danger-to-the-country-says-tr-balu.html