செவ்வாய், 15 நவம்பர், 2022

போலீசாருடன் வாக்குவாதம்

 கன்னியாகுமரிக்கு வந்த ரத யாத்திரை: போலீசாருடன் இந்து அமைப்பினர் வாக்குவாதம்

தமிழக-கேரள எல்லையான களியக்காவிளை வந்தடைந்த ராம ரதம்

ராம ரதம் நேபாளத்தில் இருந்து புறப்பட்டு ஹரித்வார், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா,கோவா, கர்நாடகம், கேரள உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக ஞாயிற்றுக்கிழமை (நவ.13) தமிழ்நாடு வந்தடைந்தது.
இந்த ரதம் தமிழ்நாட்டின் தென் எல்லை பகுதியான களியக்காவிளை வழியாக நுழைந்துள்ளது. இந்த ரதத்துக்கு அப்பகுதியில் மக்கள் வரவேற்பு அளித்தனர்.

அப்போது, ரதத்துடன் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ரதத்துடன் தங்களின் கார், இருசக்கர வாகனங்களில் பேரணி செல்ல முயன்றனர்.
இதற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது, கேரளாவில் இருந்து இப்பகுதிக்கு ரதத்துடன் வந்த வாகனங்களுக்கு மட்டுமே கன்னியாகுமரி வரையில் உடன் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, ஏனையோர் கலைந்து செல்லுங்கள் என துணைகண்காணிப்பாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

அப்போது, வெள்ளிமலை இந்து தர்ம வித்யா பீட தலைவர் சுவாமி சைதானந்த மகராஜ் மற்றும் அவருடன் வந்த இந்துத்துவ அமைப்பினர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ரதம் கன்னியாகுமரி வந்து சேர்ந்தது.

தொடர்ந்து, மதுரை, சேலம், திருவண்ணாமலை, வேலூர் வழியாக ஆந்திரம் மாநிலம் செல்கிறது.

இந்த ரதம் அயோத்தியில் ரத யாத்திரை நிறைவு செய்கிறது. வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது எல்.கே.அத்வானி தொடங்கிவைத்த ரத யாத்திரை இன்றளவும் முற்றுப்புள்ளியை காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் த.இ.தாகூர்

source https://tamil.indianexpress.com/tamilnadu/rama-chariot-reached-in-tamil-nadu-541754/