31 10 2022
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இரண்டாவது முறையாக
தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ராஜா சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் அரசியல் நிலவரங்கள் குறித்து
செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
குஜராத் மாநிலத்தில் ஒரு பாலம் தகர்ந்து பலர் உயிரிழந்து இருக்கிறார்கள், மேலும் பலர்
படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வருதங்களை தெரிவித்து கொள்கிறோம். இந்த
பாலம் புதுப்பிக்க பட்ட பின் எப்படி இது நடந்தது என்பதை குஜராத் மாநில அரசு தீர
விசாரணை நடத்த வேண்டுமென தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தென் அமெரிக்காவில் பல இடங்களில் இடது சார்பு அரசியல் தோன்றி வருகிறது. குறிப்பாக பிரேசில், அர்ஜென்டினா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இடதுசாரி சார்பு அரசுகள் அமைவதற்கான வகையில் மக்கள் வாக்களித்து வருகிறார்கள். இடதுசாரி சார்புதான் மக்களுக்கு இன்று ஒரு மாற்றாக இருக்க கூடும் என அந்த மக்கள்
உணர்ந்து இருக்கிறார்கள். இதற்கு சான்றாக தென் அமெரிக்காவில் அதிபராக லூலா
அதிபராக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
நம்முடைய நாடு பன்முகத் தன்மை கொண்ட நாடு எனவும் பாஜக ஆட்சி ஆர் எஸ் எஸ்
இயக்கத்தின் மூலம் இயங்கி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார். இப்போது மோடி இரண்டாவது முறையாக பிரதமராக இருந்து வருகிறார். மதவெறியை மக்களுக்குள் கொண்டு திணிக்கும் செயலில் பாஜக செயல்பட்டு வருகிறது. நாடு பல நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகிறது. மோடி வளர்ச்சி குறித்து பேசும் அனைத்தும் வாய் ஜாலங்கள் மற்றும்
பொய்கள் என இப்போது புலப்பட்டு வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு இத்தகைய
வீழ்ச்சி அடைய காரணம் மோடி அரசாங்கம் தான். இந்தியாவில் உலக அளவில் பசியால்
வாடுகிற மக்கள் அதிகம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதானி அம்பானி போன்றவர்கள் எல்லாம் இன்று உலக அளவில் யார் பணக்காரர்கள் என
போட்டி போட்டு கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உள்நாட்டில் பசி பட்டினி என
இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. இதற்கு
காரணம் மோடி அரசாங்கம் தான். பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் கூட்டத்தால் இந்திய
குடியரசு சட்டம் அடிப்படையாக தகர்க்க படுகிறது. இந்திய குடியரசு சட்டம்
இந்தியாவை மத சார்பற்ற நாடு மற்றும் அரசாக தான் இலக்கண படுத்தி இருக்கிறது.
இந்திய அரசானது கூட்டாட்சி நெறியை ஏற்றுகொண்ட அரசாக செயல்பட வேண்டும் என
இலக்கணம் வகுத்துள்ளதாக கூறினார்
மேலும் இந்தியா ஒரு மாத சார்பற்ற குடியரசாக இருக்க வேண்டும் என அம்பேத்கார்
கூறியிருக்கிறார். இப்படிபட்ட சூழலில் தான் எங்கள் கட்சி இந்திய ஜனநாயகம்
மற்றும் அரசியல் சட்டத்தை காப்பாற்ற போராடி வருகிறது. பாஜகவை அதிகாரத்தில்
இருந்து மாற்ற வேண்டும், இதைத்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன் வைத்து
இருக்கிறது. மாநில கட்சிகள், மத சார்பறற கட்சிகள், இடதுசாரி கட்சிகள்
உள்ளிட்டவை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எல்லோருக்கும் கல்வி, மருத்துவம்,
வேலைவாய்ப்பு, குடியிருப்பு, உணவுக்கான உத்திரவாதம், நிலம் உள்ளிட்டவை சார்ந்த
உரிமைகள் இருக்க வேண்டும். இதற்காக பாஜகவை எதிர்த்து போராட வேண்டும். 2024
பாராளுமன்ற தேர்தலில் அவர்களை எப்படி முறியடித்து நாட்டை காப்பாற்ற வேண்டும்
என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். மத சார்பற்ற ஜனநாயக கட்சிகளின் ஒன்றுமையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
கோவையில் நடைபெற்ற சம்பவம் எல்லோராலும் கண்டிக்க பட வேண்டும். அதன் உண்மை பின்னணிகள் NIA விசாரித்து வருகிறது இதனை காரணம் காட்டி மாநில அரசை இழிவு படுத்துவது ஏற்க இயலாது. ஆளுநர் கொடுத்துவரும் அறிக்கையில், அவர் செய்துவரும் கருத்து வெளிப்பாடு உள்ளிட்டவை குறித்து எங்கள் கட்சியின் அகில இந்திய மாநாடு விவாதித்தது. தீவிரவாதம் என்ற கொள்கைகளால் சனாதனத்தை குறித்து பேசுவது
சரியல்ல. வலது சாரி மற்றும் பாசிச கொள்கைகள் கொண்ட கட்சிகளை எதிர்ப்பதில் தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் பொறுப்பில் இருக்கும் போது ஆளுநரின் பொறுப்பு என்ன? அவரது நியமனம் அரசியல் நியமணமாக இருக்கிறது. ஆளுநர்கள் அனைவரும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்களாக செயல்பட வைக்கிறார்கள். கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் மோதல்கள் தொடர்ந்து வருகின்றன என்பதை மக்கள் பார்த்துகொண்டு தான் இருக்கிறார்கள். நம்முடைய பாராளுமன்ற ஜனநாயக அமைப்பில் ஆளுநர்கள் தேவை தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. எங்கள் கட்சியும் ஆளுநர்கள் தேவைதானா என்ற கேள்வி எழுப்பும் கட்சிகளுடன் இணைகிறது. அவர் ஆளுநர் பொறுப்பில் இருந்த விலகி விட்டு எங்கேயாவது ஒரு கட்சியில் இணைந்து எதையாவது பேசட்டும். அதை விட்டுவிட்டு சனாதானம் மற்றும் மற்ற விஷயங்கள் குறித்து ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருந்துக் கொண்டு பேசுவது சரியில்லை.
வன்முறை, பயங்கரவாதம், தீவிரவாதம் எந்த விதத்தில் வந்தாலும் அது எதிர்க்கபட வேண்டும். அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றுபட்டுவிடும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பிடியிலிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். அதனை மையமாக வைத்து மதசார்பற்ற காட்சிகள் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
– பரசுராமன்.ப
source https://news7tamil.live/appointment-of-governors-is-a-political-appointment-t-raja-opined.html