சுற்றுப்புற சூழலை மேம்படுத்தும் வகையில் டூவீலரில் சென்று 10 ஆயிரம் விதைப்பந்துகளை தூவி 600 கிலோமீட்டர் உலக சாதனை செய்த கீழக்கரை மாணவர் பாசித் மற்றும் அவரது நண்பர் கிஷோர்
கீழக்கரை புதுத்தெருவை சேர்ந்த இஸ்லாமிய பள்ளி முன்னாள் மாணவன் முஹம்மது பாசித் கோவையில் சாப்ட்வேர் என்ஜினீயர் ஆக பணிபுரிந்து வருகிறார். அவர் சில ஆண்டுகளாக சமூக செயல்பாடுகள் நிறைய செய்து கொண்டு வருகிறார்,தற்போது அவர் செய்த ஒரு செயல்பாடு உலக சாதனை ஆக பதிவிட பட்டுள்ளது,
இந்த செயல்பாடு 16-01-2023 காலை 5 மணி அளவில் தொடங்கி 17-01-2023 அதிகாலை 2 மணி அளவில் முடிக்க பட்டது.
இந்த சாதனை கலாம்ஸ் வேர்ல்ட் ரெகார்டில் புதிய உலகசாதனை ஆக 21-01-2023 அன்று அறிவிக்க பட்டது


Credit : FB Keelakarai Times News page