சனி, 28 ஜனவரி, 2023

ஜம்மு காஷ்மீரில், ‘பாரத் ஜோடோ யாத்திரை’ நிறுத்தம்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

 

27 1 2023

ஜம்மு காஷ்மீரில், ‘பாரத் ஜோடோ யாத்திரை’ நிறுத்தம்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராகுல் காந்தியின் பாதுகாப்பில் ‘கடுமையான’ குறைபாடு இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியதை அடுத்து, பாரத் ஜோடோ யாத்திரை வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் கைவிடப்பட்டது.

முன்னதாக, ராகுல் காந்தி மற்றும் யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் தொண்டர்களுக்கு பானிஹால் பகுதியில் பாதுகாப்பு மறுக்கப்பட்டுள்ளதாக பல்வேறு கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் ஏற்பாடுகள் துரதிர்ஷ்டவசமாக உள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் முற்றிலும் சீர்குலைந்து உள்ளன. எனவே இன்றைய தினம் தனது நடைப்பயணத்தை ரத்து செய்ய நேரிட்டது.

மேலும், “இந்தக் கூட்டத்தை நிர்வகிக்க வேண்டிய காவல்துறையினரை எங்கும் காணவில்லை” என்றார். தொடர்ந்து, “பாதுகாப்பை வழங்குவது ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் பொறுப்பு… யாத்திரையின் மீதமுள்ள நாட்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

ராகுல் காந்தி செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தனது பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கி ஜனவரி 30 அன்று ஸ்ரீநகரில் முடிக்க நினைத்தார்.
இந்தக்

குற்றச்சாட்டுகளுக்கு முன்னர், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா வெள்ளிக்கிழமை பனிஹாலில் பாரத் ஜோடோ யாத்ராவில் கலந்து கொண்டார்.

ராகுல் காந்தி குடியரசு தின கொண்டாட்டங்கள் காரணமாக ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் உள்ள பனிஹாலில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கினார்.
அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதாக குற்றஞ்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை, “எங்களிடம் கூறிய கூட்டத்தை விட அதிக மக்கள் கலந்துகொண்டுள்ளனர்” என்றனர்.

இதற்கிடையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர், தகவல் தொடர்பு, ஜெய்ராம் ரமேஷ் கருத்துப்படி, யாத்திரை ஜம்முவின் பல்வேறு மாவட்டங்களைக் கடந்து கிட்டத்தட்ட 90 கிலோமீட்டர்களைக் கடந்துள்ளது என்றார்.

source https://tamil.indianexpress.com/india/bharat-jodo-yatra-yatra-suspended-for-today-as-congress-alleges-security-breach-583654/