வியாழன், 19 ஜனவரி, 2023

மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா? சாதகமாகுமா?

 18 1 2023

சீனாவின் மக்கள தொகை குறைந்து வரும் அதே நேரத்தில் இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்து வருவதாக தரவுகள் கூறுகிறது.

2022-ம் ஆண்டு சினாவின் மக்கள் தொகை 141 கோடியாக உள்ளது. இதுவே 2021ல் 141 கோடியாக உள்ளது. ஆனால் இந்தியாவில் 2011-க்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை

ஆனால் ஐ.நா.சபையின் கணிப்புகள் படி 2022-ம் ஆண்டு, 141.7 கோடியாக இருந்தது என்று கூறப்படுகிறது. 2023-ம் ஆண்டில் மக்கள் தொகை  143 கோடி  இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது சீனாவைவிட அதிகம். சீனாவின் மக்கள் தொகை குறைவதற்கும், இந்தியாவின் மக்கள் தொகை அதிகரிப்பதற்கும்  முக்கிய காரணிகள் இருக்கிறது.

ஒரு நாட்டின் இறப்பு சதவிகிதம் குறைந்தால், அந்நாட்டின் மக்கள் தொகை அதிகமாகும். அதுபோல குழந்தை பிறப்பு சதவிகிதம் குறைந்தால், நாட்டின் மக்கள் தொகை குறையும். உதாரணமாக சீனாவின் மக்கள் தொகை குறைந்ததற்கு இதுதான் காரணம்.

இறப்பின் சதவிகிதம் குறைவதற்கு கல்வி தகுதியில் வளர்ச்சியடைவதும்,பொது சுகாதாரம்,  சரியான உணவு மற்றும் மருத்துவம் , சுத்தமான தண்ணீர், கழிப்பறை வசதிகள் தேவை.

1950- சீனாவில் ஒரு வருடத்தில் இறக்கும் மக்களின் எண்ணிக்கை ஆயிரம் பேரில் 23 பேர் மரணமடைந்துள்ளனர்.  இந்தியாவில் இது 22 பேராக இருந்தது. 2020  சீனாவில் 7.3 ஆகவும். இந்தியாவில்  7.4 ஆகவும் உள்ளது.

இந்நிலையில் குழந்தை பிறக்கும் விகிதம் சீனாவில் 1991-ம் ஆண்டு வீழ்ச்சியடைய தொடங்கியது. இந்தியாவை விட 30 வருடங்களுக்கு முன்பே இது தொடங்கிவிட்டது.

மேலும் சீனாவின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை 1980-களில் சீனா நடைமுறைக்கு கொண்டு வந்தது.

இந்நிலையில் சீனா சந்திக்கபோகும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று. பணியாற்றும் மக்களின் சதவிகிதம் குறைய வாய்ப்பிருக்கிறது. பணிபுரியும் மக்கள் தொகை 2045-ல் பாதியாக குறையும். இதனால் கடும் பொருளாதார நெருக்கடியை சீனா சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் தற்போது மக்கள் தொகை அதிகரித்தாலும். பணிபுரியும் மக்கள் தொகை குறையாது. ஆனால் அதிகரிக்கும் இளைஞர்களின் தொகைக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.


source https://tamil.indianexpress.com/explained/chinas-population-falls-how-indias-situation-is-different-578337/