ஞாயிறு, 15 ஜனவரி, 2023

குடிநீரில் மனிதக் கழிவு: வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்.. தமிழ்நாடு அரசு நடவடிக்கை

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் வேங்கைவயல் தெருவில் பட்டியல் இன தலித் மக்கள் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் அவர்களுடைய குடிநீர் தேவைக்காக 2016-17-ம் ஆண்டில் 10,000 லிட்டர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. இதிலிருந்துதான் அவர்கள் குடிநீர் விநியோகம் பெற்று வந்தனர்.

இந்நிலையில், வேங்கைவயல் தெருவில் வசிக்கும் பட்டியல் இன மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரில் மனிதக் கழிவைக் கலந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அந்த கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எஸ்.பி வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்

இச்சம்பவம் தொடர்பாக, இறையூர் ஊராட்சி மன்றத் தலைவர் அளித்த புகாரின்பேரில், வெள்ளனூர் காவல் நிலைய போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக கிட்டத்தட்ட 85 பேருக்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். எனினும் வழக்கில் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில் வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அப்போது இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/pudukottai-human-waste-mixed-with-drinking-water-case-transferred-to-cbcid-576537/