செவ்வாய், 17 ஜனவரி, 2023

கேரளாவில் மீண்டும் கொரோனோ கட்டுப்பாடு – அறிக்கை வெளியிட்ட சுகாதார துறை

 

17 1 2023

கேரளாவில் கடந்த 12 ம் தேதி வெளியான கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் குறித்த அறிக்கையால் மீண்டும் மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

உலக நாடுகளில் உருமாறிய கொரோனோ மீண்டும் பரவி வரும் நிலையில் அந்த அந்த நாடுகளில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது. இந்நிலையில் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களை கண்காணிக்கும் பணிகள் திவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் சீனாவில் கொரோனாவால் 60,000 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியிட்டப்பட்டது. இதுகுறித்த மேலும் விவரங்களை உலக சுகாதார மையம் கேட்டுள்ளது.

இந்த நிலையில் பொது இடங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளி கடைபிடித்து முக கவசம் அணியவது கட்டாயம் என கேரள சுகாதார துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையால் மீண்டும் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளன.

பள்ளி கல்லூரி, தொழில் நிறுவனங்கள் போன்ற இடங்களில் சானிடைசர் பயன்படுத்த வேண்டும் எனவும்அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் கடந்த 12 ம் தேதி சுகாதார துறை அறிக்கை வெளியிட்டது. கொரோனோ குறித்து மீண்டும் ஊரடங்கு வருமா? என யாரும் அச்ச பட வேண்டாம்.ஏற்கனவே இருக்கும் நடைமுறையை பின்பற்றுவதே இதன் நோக்கம் என சுகாதார துறை தெரிவித்துள்ளன.

source https://news7tamil.live/covid-restrictions-again-in-kerala.html