14 1 2023
சீனாவில் கடந்த 35 நாட்களில் கொரோனாவால் ஏறத்தாழ 60,000 பேர் உயிரிழந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. தொடர்ந்து உலக நாடுகளில் பரவிய கொரோனா உலகையே ஆட்டிப் படைத்தது. பின்னர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்தது.
தற்போது மீண்டும் சீனாவில் உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பல்வேறு நகரங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 35 நாட்களில் கொரோனாவிற்கு ஏறத்தாழ 60 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் மருத்துவ பரிசோதனை பிரிவுத்தலைவர் ஜியோ யாஹுய் தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முதல் 2023ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கொரோனா தொடர்பாக 59 ஆயிரத்து 938 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/corona-virus-rampant-in-china-60000-deaths-in-35-days.html