25 1 2023
ப. சிதம்பரம்
சமீபத்திய வாரங்களில், மூன்று அரசியலமைப்பு அதிகாரங்கள் கொண்ட மூவர் அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். திரு. ஜக்தீப் தன்கர், மாண்புமிகு இந்தியாவின் துணைத் தலைவர் மற்றும் ராஜ்யசபா தலைவர். இவர் 1951-இல் பிறந்தார். அடுத்தவர் திரு. ஓம் பிர்லா, மாண்புமிகு மக்களவை சபாநாயகர். இவர் 1962-இல் பிறந்தார். அடுத்து திரு. கிரண் ரிஜிஜு, மாண்புமிகு சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர். இவர் 1971-இல் பிறந்தார். இதில் முதல் நபர் நெருக்கடி காலம் என்பதை (1975-1977) அனுபவித்திருப்பார், இரண்டாவது நபர் அதைக் கேள்விப்பட்டு படித்திருப்பார், மூன்றாவது நபர் அதை வரலாறாக படித்திருப்பார்
1967 ஆம் ஆண்டில், கோலக்நாத் vs பஞ்சாப் மாநிலம் என்ற சொத்து தகராறில், உச்ச நீதிமன்ற விசாரணைக்கு இந்த வழக்கு . இந்த வழக்கு ஒரு முக்கிய தீர்ப்பளித்தது. இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் பாகத்தில் உள்ள அடிப்படை உரிமைகளை பாராளுமன்றத்தால் ரத்து செய்யவோ அல்லது குறைக்கவோ முடியாது என்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதாவது அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு வழங்கிய அடிப்படை உரிமைகளை பாராளுமன்றம் சட்டம் இயற்றி மாற்றிவிட முடியுமா என்பது தான் வழக்கு. இந்த வழக்கில் ஆறு நீதிபதிகள் இதற்கு ஆதரவாகவும் ஐந்து நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பளித்தனர். இந்த வழக்கின் மையப் பிரச்சினை ‘சொத்து’ சுதந்திரம் பற்றியது மட்டுமே. சுதந்திரம் பற்றியது அல்ல. எனவே இது கருத்தியல் விவாதமாகி விட்டது.
கேசவானந்த பாரதி vs கேரளா மாநிலம் (1973) தீர்ப்பில் எச்சரிக்கையை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் எதுவும் இல்லை. இந்த வழக்கிலும் மையப் பிரச்சினை, ‘சொத்து’ பற்றியது தான். கேரள அரசு இயற்றிய நிலச் சீர்திருத்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்து இந்த வழக்கில் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் தோற்று போனார். அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பைக் காப்பாற்ற, அடிப்படை உரிமைகள் உட்பட அரசியலமைப்பை திருத்துவதற்கு பாராளுமன்றத்தின் அதிகாரத்தை நீதிமன்றம் உறுதி செய்தது. நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள ‘அடிப்படை கட்டமைப்பின்’ சில உதாரணங்கள் சர்ச்சைக்கு அப்பாற்பட்டவை. கூட்டாட்சி, மதச்சார்பின்மை மற்றும் சுதந்திரமான நீதித்துறை ஆகியவை அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்கள் என்ற முடிவில் யார் தவறு காண முடியும்? இது தொடர்பான விவாதங்கள் தொட ர்ந்தன. ஆனால் அது கோலக்நாத் தூண்டிய விவாதத்தை விட இதில் சித்தாந்த வேகம் குறைவு தான்.
ஜூன் 25, 1975 அன்று பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலைக்கான உடனடி காரணம், அரசியலமைப்பை திருத்தும் பாராளுமன்றத்தின் அதிகாரத்துடன் தொடர்பில்லாத ஒரு நிகழ்வே. இந்திரா காந்தி அலகாபாத் தேர்தலில் வென்றது செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்திரா காந்தியின் சார்பாக நானி பால்கிவாலா இந்த தீர்ப்பை எதிர்த்து வழக்காட ஒப்புக் கொண்டார். மேலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கமான மேல்முறையீட்டில் இந்த வழக்கு வந்திருந்தால் தீர்ப்பை ரத்து செய்வதில் அவர் வெற்றி பெற்றிருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவ்வாறு நடக்காத பட்சத்தில் எப்படியாவது இந்தியாவை ஒரு சர்வாதிகார மற்றும் அடக்குமுறை நாடாக மாற்றியமைக்கும் அரசியல் சட்டத் திருத்தங்கள் உட்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது அப்படியே நீண்டிருந்தால் இந்தியாவும் ஒரு கொடுங்கோன்மையான நாடாக மாறியிருக்கும்.
நீதித்துறை மட்டுமே அரணாக இருந்து தனது கடமையை செய்திருந்தால் இது சரியாக இருந்திருக்கும். ஆனால் நீதித்துறை மக்களை காக்க தவறி விட்டது. உச்சநீதிமன்றத்தின் வரலாற்றில் இது மிக தாழ்வான நிலைக்கு வந்தது ஏடிஎம் ஜபல்பூர் வழக்கில் தான். உச்ச நீதிமன்ற நீதிபதி ஹெச்.ஆர்.கன்னா மட்டும் அரசியல் சாசனம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளை காக்க போராடினார். உயர் நீதிமன்றங்களில், அதிர்ஷ்டவசமாக, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கீழ்ப்படிய மறுத்த சில நீதிபதிகள், தனிப்பட்ட சுதந்திரத்தை நிலைநாட்டினர். இதில் குறிப்பிடத் தகுந்தவர்கள் மத்தியப் பிரதேச நீதிபதிகள் ஜே.எஸ். வர்மா மற்றும் ஆர்.கே.தன்கா போன்றோர் தான்.
1967 முதல் 1977 வரையிலான இந்திய வரலாற்றை தன்கர், பிர்லா, ரிஜிஜூ ஆகியோர் படித்திருப்பார்கள் என நம்புகிறேன். இரண்டு தனித்தமிழ் விவகாரங்களை தங்கர் மோத விடுகிறார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எல்லாப் பிரிவுகளையும் அல்லது எந்த பிரிவையாவது நீதித்துறையின் பரிசீலனைக்கு உட்படாமல் பாராளுமன்றத்தால் திருத்தி விட முடியுமா என்பதுடன் தேசியல் நீதில் டல்ஹவுரை நியமன ஆணை சட்டம் என அழைக்கப்படும் சட்டத்தின் 99 வது பிரிவை ஏற்றுக் கொள்ள முடியுமா, இதில உச்ச நீதிமன்றத்தின் நிலைப்படப்பிக்கு என்பது என்பது இன்னொரு விதம். கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றம் சரியாக முடிவெடுத்ததாகவோ, தேசிய நீதித்துறை நியமன ஆணைய சட்ட வழக்கில் தவறாக முடிவெடுத்ததாகவோ சட்ட வல்லுநர்கள் நினைக்கின்றனர். ஆனால் தங்கரின் கருத்து படி இந்திய இன்பத்து ஜனநாயக குடியரசு என்பதுடன் கூட்டாட்சி தத்துவத்தை கடைப்பிடிப்பது சரியா என்று கேட்கும் அளவுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் ரிஜிஜு அரசமைப்பு சட்டத்தையே மாற்றியமைக்க கூடிய திட்டத்தை உருவாக்கி உள்ளார் என்பதும் இப்போது ஓங்கி ஒலிக்க தொடங்கி உள்ளது.
இதற்கெல்லாம் என்ன பதில்
அரசியலமைப்பு சட்டத்தை விட பாராளுமன்றத்தின் உயரம் தான் அதிகம் என்பதை ஏற்றுக் கொண்டால் அது தொடர்பாக சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
- ஒரு மாநிலம் அதன் அந்தஸ்தை இழந்து மத்திய ஆட்சிப் பகுதியாக பிரிக்கப் பட்டால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? உதாரணமாக ஜம்மு விவகாரம்)
2.இந்தியாவின் எந்த பகுதியில் வாழும் உரிமையும் பேச்சுரிமையும், வாழ்வதற்காக தொழில் செய்யும் உரிமையும் நிராகரிக்கப்பட்டால் அதை ஏற்றுக் கொள்வீர்களா?
3.ஆண்களும் பெண்களும் சமமாக பாவிக்க படக் கூடாது என்று சொல்லப்பட்டால் அதை ஏற்றுக் கொள்வீர்களா? இந்துக்களையும் இந்துக்கள் அல்லாதவர்களையும் வெவ்வேறு விதமாக நடத்த அனுமதிக்க முடியுமா? - முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜைனர்கள், பவுத்தர்கள், யூதர்களை மற்றும் இன்னும் சில சிறுபான்மையினருக்கு அரசியலமைப்பு சட்டம் தரும் உரிமைகளை ரத்து செய்ய ஒப்புக் கொள்வீர்கள்?
- மாநிலங்களுக்கான இரண்டாவது அட்டவணை அரசியலமைப்பு சட்டத்தின் ஏழாவது தொகுப்பிலிருந்து நீக்க சட்டம் இயற்றும் அதிகாரம் மற்றும் உரிமைகளை பாராளுமன்றத்துக்கு மட்டும் கொடுக்க ஒத்துக் கொள்வீர்களா?
- ஒரு குறிப்பிட்ட மொழியை தான் இந்தியர்கள் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டால் ஒத்துக் கொள்வீர்களா?
7.ஒருவர் தான் நிராதிபதி என நிரூபிக்கப்படும் வரை குற்றவாளிகளாகவே கருதப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டால் அதை ஒத்துக் கொள்வீர்களா?
இன்றைய நிலையில் பாராளுமன்றம் இப்படியெல்லாம் சட்டம் இயற்ற முடியாது. அப்படியே பாராளுமன்றம் சட்ட தாக்கல் செய்தாலும் அவை உச்ச நீதிமன்றத்தால் பரிசீலிக்கப் பட்டே அமலுக்கு வரும். அதே நேரத்தில் பாராளுமன்றமே முன்னுரிமை கொண்டது. நீதித்துறை தான் ஒருவித சகிப்பு தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கை பின்பற்றப்பட்டால் அதை நீதிமன்றங்களால் மறுபரிசீலனை செய்ய முடியாது. கேசவானந்த பாரதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு அரை நூற்றாண்டு கடந்த பின்பும் அதன் தாக்கம் இந்தியாவை சுற்றி, சுற்றி வருகிறது. அது நமது வளர்ச்சியை தடுப்பதாகவும் சொல்லப் படுகிறது. இது இந்தியாவுக்கும் அரசியலமைப்பு சட்டத்துக்கும், மக்களுக்கும் காவலாக இருக்கும் தேவதைக்கான தீர்ப்பாகவே நான் நம்புகிறேன்.
தமிழில் : த. வளவன்
source https://tamil.indianexpress.com/opinion/p-chidambaram-writes-constitutional-authorities-vs-constitution-582272/