ஞாயிறு, 15 ஜனவரி, 2023

ஆளுனர் குறித்து அவதூறு பேச்சு : தி.மு.க பேச்சாளர் இடைநீக்கம்

 ஆளுனர் குறித்து அவதூறு பேச்சு : தி.மு.க பேச்சாளர் இடைநீக்கம்

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பாட்டதாக திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துறைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வில் தலைமை கழக பேச்சாளராக இருப்பவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. சென்னை விருகம்பாக்கத்தில் கடந்த ஜனவரி 12-ந்’ தேதி நடந்த பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டத்தில் பேசிய இவர், தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு எதிரான அவதூராகவும் கொலை மிரட்டல் விடுப்பது போன்று பேசினார்.

ஆளுநர் தனது சட்டமன்ற உரையில் “அம்பேத்கரின் பெயரை உச்சரிக்க மறுத்தால், அவரைத் தாக்க எனக்கு உரிமை இல்லையா? தமிழக அரசு ஆற்றிய உரையை நீங்கள் (கவர்னர்) படிக்கவில்லை என்றால், காஷ்மீருக்குச் செல்லுங்கள், நாங்கள் பயங்கரவாதிகளை அனுப்புவோம், அதனால் அவர்கள் உங்களை சுட்டு வீழ்த்துவார்கள் என்று தனது பேச்சில் கூறியிருந்தார்.

மேலும் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையை கிண்டல் செய்து, அவர் ஒரு இந்தியரா என்று கேள்வி எழுப்பிய கிருஷ்ணமூர்த்தி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்த அவர், அவர் ஒரு ஆண்மகனா? நமது முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என அனைவரும் ஆண்களே, ஏனென்றால் அவர்கள் மகன்களை இந்த உலகிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

சமீப காலமாக தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாகப் பேசியதாக சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

14 1 2023



source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-leader-suspended-over-abusive-speech-against-tamil-nadu-governor-rn-ravi-576714/

Related Posts: