திங்கள், 16 ஜனவரி, 2023

எம்எல்சியின் ஆடியோ கர்நாடகத்தில் வைரலாகிவருகிறது

15 1 23

பா.ஜ.க. எம்.எல்.சி. ஆடியோ லீக்.. ஒரு ஜோக்கரின் கூக்குரல் என எதிர்க்கட்சிகள் விமர்சனம்
கர்நாடக பாஜக எம்எல்சி சிபி யோகேஷ்வர்

கர்நாடக பாஜக எம்எல்சி சிபி யோகேஷ்வர். இவர், மத்திய அமைச்சர் அமித் ஷா கட்சியின் நலன்களைப் பாதுகாக்க ஒரு வகையான ரவுடித்தனத்தை நடத்துகிறார் என்றும், பாஜக வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு “ஆபரேஷன் தாமரை” க்கு செல்லும் எனக் கூறிய ஆடியோ கிளிப் வைரலாகியுள்ளது.

யோகேஷ்வர் இது தனது குரல் அல்ல என்று மறுத்தாலும், கிளிப் ஜோடிக்கப்பட்ட ஒன்று என்று குற்றம் சாட்டினாலும், அது பாஜகவை குறிவைக்க எதிர்க்கட்சிகளுக்கு இது போதுமானதாக உள்ளது.

அந்த ஆடியோவில், “அமித் ஷா ஒருவிதமாக ரவுடித்தனம் செய்கிறார்”. மேலும் தாயை காட்டிக் கொடுக்க கூடாது என்றும் சொல்கிறார். தொடர்ந்து ஆடியோவில் சில ஆபாச வார்த்கைளும் உள்ளன.

மேலும் அந்த ஆடியோவில், “அமித் ஷா பேரணியின்போது புதிய மொழியை கையாளுகிறார். மற்ற கட்சிகளுடன் புரிந்துணர்வு கொண்ட எவரையும் அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார்.
தொடர்ந்து, அமித் ஷா மூன்று மணி நேரம் நீடித்த கூட்டத்தை நடத்தியதாகவும், மற்ற கட்சிகளுடன் புரிந்துணர்வு வைத்திருப்பவர்கள் பற்றி தனக்குத் தெரியும் என்று பாஜக தலைவர்களிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, ​பழைய மைசூரு பகுதியைச் சேர்ந்த பல காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் சேருவார்கள் என்றும் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

JD(S) தலைவர் H D குமாரசாமி ஆடியோவில் கூறப்பட்டுள்ள கூற்றுகளை “ஒரு ஜோக்கரின் கூக்குரல்கள்” என்று நிராகரித்துள்ள நிலையில், இந்த அறிக்கைகள் பாஜக ரவுடிகளின் கட்சி என்ற “உண்மையை” பிரதிபலிப்பதாக காங்கிரஸ் கூறியது.

மேலும் அக்கட்சி தரப்பில் ட்வீட்டரில், “கற்பனையான ‘தேர்தல் சாணக்யா’வின் உண்மையான நடத்தை பாஜக தலைவர்களுக்குத் தெரியும். கிரிமினல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ரவுடி நடத்தை சகஜம். தலைவர்களே ரவுடிகளாக இருக்கும்போது, ரவுடிகள் கட்சியில் சேர்வது சகஜம்” எனக் கூறப்பட்டுள்ளது.


 source https://tamil.indianexpress.com/india/bjp-denies-claims-in-leaked-audio-tape-of-mlc-576800/