26 1 2023
source https://tamil.indianexpress.com/india/republic-day-tableau-of-states-shows-cultural-diversity-583179/
நாட்டின் 74வது குடியரசு தினம் விழா கொண்டாட்டத்தின்போது, இந்தியாவின் ராணுவ வீரம், ‘ஆத்மநிர்பர்தா’ மற்றும் பல்வேறு கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றின் உணர்வோடு கார்தவ்ய பாதையில் வியாழக்கிழமை அன்று காட்சிப்படுத்தப்பட்டது.
குடியரசு தின விழா அணி வகுப்பில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 17 ஊர்திகள், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த 6 ஊர்திகள் என 23 ஊர்திகள் இந்தியா முழுவதிலும் இருந்து பல கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் கார்தவ்ய பாதையில் அணி வகுத்து வந்தன.
புதுடெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற 74வது குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற மகாராஷ்டிரா மாநில ஊர்தி.
புதுடெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற 74வது குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற கேரளா ஊர்தி
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல உயரதிகாரிகள் மற்றும் ஆயுதப் படை வீரர்களுடன் இணைந்து கொண்டாட்டத்தின் முக்கிய கருப்பொருளாக ‘நாரி சக்தி’ இருந்தது.
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தின் படி, தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து 21 துப்பாக்கி குண்டுகள் முழக்கத்துடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இந்த ஆண்டு வழக்கமாக துப்பாக்கி குண்டுகள் முழங்கி வணக்கம் செலுத்துவதற்கு வழங்கப்படும் பழங்கால 25-பவுண்டர் துப்பாக்கிகளுக்குப் பதிலாக, 105-மிமீ இந்திய பீல்ட் துப்பாக்கிகள் வழங்கப்பட்டது. இது பாதுகாப்பில் வளர்ந்து வரும் ‘ஆத்மநிர்பர்தா’வைப் பிரதிபலிக்கிறது.
புதுடெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற 74வது குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெற்ற மேற்கு வங்கத்தின் ஊர்தி
புதுடெல்லியில் நடந்த 74வது குடியரசு தின அணிவகுப்பின் போது இடம்பெற்ற லடாக் ஊர்தி
புதுதில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற 74வது குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற ஜம்மு காஷ்மீர் ஊர்தி
புதுடெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற 74வது குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற அஸ்ஸாம் ஊர்தி
புதுடெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற 74வது குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற அஸ்ஸாம் மாநில ஊர்தி
புதுடெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற 74வது குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற திரிபுரா மாநில ஊர்தி
புதுடெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற 74வது குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற குஜராத் மாநில ஊர்தி
புதுடெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற 74வது குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற ஆந்திரப் பிரதேச ஊர்தி